பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - பெரிய புராண هen 9 - فعة

காய்ந்தவர் இருந்த வெள்ளிக்

கைலைமால் வரையை கண்ண வாய்ந்தபே ரருள்முன் கூர

வழிபடும் வழியால் வந்தார்.'

ஆய்ந்த - அந்தப் புனிதவதியார் ஆராய்ந்து அமைத்த. சீர் . சீர்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சிரி - செய்யுட்கு உரிய சீர். அவையாவன: இரண்டு சீர்கள் மூன்று சர்கள்: நான்கு சீர்கள்: ஐந்து சீர்கள் ஆறு சீர்கள்: ஏழு சர்கள்; எட்டுச் சீர்கள்: ஒன்பது சீர்கள் முதலியவை. இரட்டை மாலை - திருஇரட்டை மணிமாலை. அந்தாதி - அற்புதத் திரு அந்தாதி. எடுத்து - ஆகியவற்றைப் பாடத் தொடங்கி. ப் : சந்தி. பாடி பாடி நிறைவேற்றியருளி. ஏய்ந்த - தம்மிடம் அமைந்த பேர் - பெ ரு மை யை ப் பெற்று விளங்கும். உணர்வு - உணர்ச்சி. .ெ பாங் க - பொங்கி எழ. எயில்ஒரு மூன்றும் - வித்யுன்மாலி, தார காட்சன், வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய ஆகும் கோட்டைகள்ாகிய மதில்கள் ஆகும் முன்று புரங்களையும். எயில் : ஒருமை பன்மை மயக்கம். முன் நாள். முன்பு ஒரு காலத்தில். காய்ந்தவர் . சினம் மூண்டு எரித்தவராகிய கைலாசபதியார். இருந்த எழுந்தருளி யுள்ள வெள்ளிக்கைலை மால்வரையை - பெருமையைப் பெற்று விளங்கும் வெள்ளிமலையாகிய கைலை மலையை தண்ண - அடைவதற்காக. வாய்ந்த-வாய்ப்பாக அமைந்த பேரருள் - அந்தக் கைலாசபதியார் வழங்கிய பெரிய திருவருள். முன் . முன்னால். கூர - மிகுதியாக உண்டாக, வழிபடும் - யாவரும் வழிபாட்டைப் புரியும். வழி யால் - - வழியில் உள்ள படிகளில் ஏறி அந்தப் புனிதவதியார் கைலாச மலையின் உச்சிக்கு. வழியால் : உருபு மயக்கம். வந்தார் வந்து சேர்ந்தார். . . .

அவ்வாறு காரைக்கால் அம்மையார் பாடியருளிய திருவிரட்டை மணிமாலையில் வரும் முதற் கட்டளைக் கன்த்துறை வருமாறு : . х .