பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 .- பெரிய புராண விளக்கம். 9

அண்டர்கா யகனார் என்னை -

அறிவரேல் அறியா வாய்மை எண்டிசை மாக்களுக் கியான்

எவ்வுரு வாயென்?' என்பார்.' கண்டவர் - பேயுருவத்தை அடைந்த அந்தப் புனித வதியாரைப் பார்த்த மக்கள் ஒருமை பன்மை மயக்கம்: வியப்பு - அதிசயத்தை. உற்று -அ ை- ந் து. அ ஞ் சி . பயத்தைப் பெற்று. க்:சந்தி. கை அகன்று-அந்த இடத்தை விட்டு நீங்கி. ஓடுவார்கள் - ஓடிப்போவார்கள். கொண்டது ஒர் - அந்தப் புனிதவதியார் எடுத்துக்கொண்டதாகிய ஒரு. வேட - பேய் வேடத்திடைய. த் : சந்தி. தன்மை - இயல்பை உள்ளவா - உள்ளவாறு கூற - கண்டவர்கள் சொல்ல. க் சந்தி. கேட்டு - அதனைக் கேட்டு. ஏ : அசை நிலை: அண்டர் - தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகனார் - தலைவராகிய கைலாச பதியார். என்னை - அடியேனை. அறிவரேல் - தெரிந்து கொண்டருள்வாரானால் அறியா - தெரிந்துகொள்ளாத. வாய்மை - உண்மையை, எண்திசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் ஊர்களில் வாழும். திசை : ஒருமை பன்மை மயக்கம். மாக்களுக்கு - மக்களுக்கு : "அறிவுஇல்லாத மக்களுக்கு எனலும், ચ્છિા. இ:குற்றியலிகரம். யான் அடியேன்; இது புனிதவதியார் தம்மைக் குறித்து. எவ்வுருவாய் - எந்த வடிவமானால். என்:- என்ன . என்பார் என்று அந்தப் புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். . . . .

அடுத்து உள்ள 55 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : .ெ அந்தப் புனிதவதியார் செந்தமிழ் நாட்டுக்கு வடக்குத் சையில் உள்ள நாடுகள் எல்லாவற்றையும் உள்ளத்தைக் 2; காட்டிலும் வேகமாகப் போய் தொடுத்தலைப் பெற்று ` மலரும் கொன்றை மலர் மாலை யை அணி ந் த