பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 125

திரிகுலத்தைத் தம்முடைய திருக்கரத்தில் ஏந்தியவராகிய கைலாச பதியார் விரும்பி எழுந்தருளியிருக்கும் பிரகாசழ் விரிந்து வீசும் கைலை மலையினுடைய பக்கத்தை அடைந்து அந்த இடத்தில் தம்முடைய திருவடிகளால் நடக்கும் நடையை விட்டுவிட்டுத் தரையின் மேல் தம்முடைய தலையினால் நடந்து கைலாச மலையின் உச் சி க்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு:

வடதிசைத் தேசம் எல்லாம்

மனத்தினும் கடிது சென்று தொடையவிழ் இதழி மாலைச் குலபா ணியனார் மேவும் படரொளிக் கைலை வெற்பின்

பாங்கனைக் தாங்குக் காலின் கடையினைத் தவிர்த்துப் பார்மேல்

தலையினால் கடந்து சென்றார்.'

வடதிசை - அந்தப் புனிதவதியார் செந் தமிழ் நாட்டுக்கு வடக்குத் திசையில் உள்ள. த் : சந்தி. தேசம், நாடுகள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம் - எல்லா வற்றையும். மனத்தினும் - தம்முடைய திருவுள்ளத்தைக் காட்டிலும், கடிது - வேகமாக. சென் று - போ ய், தொடை-தொடுத்தலைப் பெற்று. அவிழ்-மலரும், இதழி - கொன்றை மலர். மாலை - மாலையை அணிந்த, ச் சந்தி. சூல - திரிசூலத்தை, பாணியனார் - தம்முடைய திருக் கரத்தில் ஏந்தியவராகிய கைலாசபதியார். மேவும் . விரும்பி எழுந்தருளியிருக்கும். படர் ஒளி - பிரகாசம் விரிந்து வீசும். க் சந் தி. கைலைவெற்பின் - ைக ைல மலையினுடைய. பாங்கு - பக்கத்தை. அணைந்து - அந்தப் புனிதவதியார் அடைந்து ஆங்கு - அந்த இடத்தில். க் அந்தி. காலின் - தம்முடைய திருவடிகளால் நடக்கும். கால் : ஒருமை பன்மை மயக்கம். நடையினை - நடையை. த் சந்தி. தவிர்த்து - விட்டுவிட்டு. ப் : சந்தி. பார்மேல் - தரையின்மேல். தலையினால் - தம்முடைய தலையினால்.