பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெரிய புராண விளக்கம் - 9

நீடந்து - சென்றார் . நடந்து அந்தக் க யி லா ய ம ன ல வினுடைய உச்சிக்கு எழுந்தருளினார். -

அடுத்து வரும் 56 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

  • அவ்வாறு அந்தப் புனிதவதியார் கைலாச மலையி னுடைய உச்சிக்குத் தம்முடைய தலையினால் நடந்து போய் சங்கரனாகிய கைலாசபதி வீற்றிருந்த வெள்ளி: மலையாகிய கயிலாய மலையின்மேல் ஏறும் சமயத்தில் மகிழ்ச்சியோடு பக்தியும் தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழ கிரணங்களைப் பெற்ற இளமையைக் கொண்ட பிறைச்சந்திரனாகிய கண்ணியைச் சூடும் நெற்றியியில் ஒன்றைக் கண்ணைப் பெற்றவராகிய கயிலாச பதியாருடைய ஒப்பற்ற வாமபாகத்தில் எழுந் தருளியிருக்கும் வில்லைப் போன்ற நெற்றியைப் பெற்ற இமாசல அரசனுடைய புதல்வியும் பூங்கொடியைப்போன்ற வரும் ஆகிய பார்வதி தேவியினுடைய அழகிய விழியி னுடைய பார்வை அந்தப் புனிதவதியாரை அடைந்தது.” பாடல் வருமாறு :

" தலையினால் கடந்து சென்று

சங்கரன் இருந்த வெள்ளி மலையின்மேல் ஏறும் போது

மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் கலைவிளங் திங்கட் கண்ணிக்

கண்ணுதல் ஒருபா கத்துச் சிலைநுதல் இமய வல்லி

திருக்கண்நோக் குற்ற தன்றே. , தலையினால் - அவ்வாறு அந்தப் பு னி த வ தி யார் கைலாச மலையினுடைய உச்சிக்குத் தம்முடைய தலை யினால், நடந்து சென்று - நடந்து போய். சங்கரன் - சுகத்தைச் செய்பவனாகிய ைக லா ச பதி. இரு ந் த - -விற்றிருந்த, வெள்ளி மலையின்மேல்-வெள்ளி மலையாகிய கயிலாய மலையின் மேல், ஏறும்போது - அந்தப் புனித