பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟28 பெரிய புராண விளக்கம் 9

எம்பெரு மானோர் எற்பின் -

யாக்கைஅன் பென்னே' என்ன

நம்பெரு மாட்டிக் கங்கு

நாயகன் அருளிச் செய்வான்.

அம்பிகை - பார்வதி தேவியார். திருவுள்ளத்தின் - தம்முடைய திருவுள்ளத்தில். அதிசயித்தருளி - வியப்பை அடைந்தருளி. த் சந்தி, தாழ்ந்து - தரையில் விழுந்து பணிந்து விட்டு. தம் - தம்முடைய. பெ ரு மா ைன - கணவராகிய கைலாசபதியாரை ஒருமை பன்மை மயக்கம். நோ க் கி பார் க் த ரு ளி. த் : ச ந் தி. த லை யினால் தன்னுடைய தலையால். நடந்து - நடந்து வந்து. இங்கு இந்தக் கைலாச மலையின்மேல். ஏறும்ஏறிவரும். எம்பெருமான் - எம் பெருமானே விளி. ஒர் எற்பின. ஓர் எலும்பு மயனான யாக்கை - உடம்பைப் பெற்றவளுடைய: ஆகுபெயர். அன்பு - பக்தி. என்னே எத்தகைய ஆச்சரியமானது! என்ன - என்று பார்வதிதேவி திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. நம் . அடியேங்களுடைய. இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பெருமாட்டிக்கு - தலைவியாகிய பார்வதிதேவிக்கு, அங்கு - அந்தக் கை ல | ச த் தி ல். நாயகன் . அந்தப் பார்வதி தேவியினுடைய கணவனாகிய கைலாசபதி. அருளிச் செய்வான் - பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்பவனானான். . . .

பிறகு வரும் 58 - ஆம் கவியின் கருத்து வருமாறு : இந்தக் கைலாச மலையின்மேல் ஏறிவரும் இந்தப் பெண்மணி நம்மை விரும்பிப் பாதுகாக்கும் அன்னை: இதை நீ பார்ப்பாயாக, உமாதேவியே, இந்தப் பெரு மையைச் சேர்ந்து விளங்கும் பேயின் வடிவத்தைத்தான் எம்மை வேண்டிக் கொண்டு பெற்றாள்' எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டுப் பிறகு அந்தப் பேய் வடிவத் தைக்கொண்ட புனிதவதி தம்முடைய சமீபத்திற்கு வந்து