பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாரைக்கால் அம்மையார் புராணம் . 129.

சேர அதனைப் பார்த்து, "என்னுடைய அம்மையே என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்யும் செம்மையாகிய, ஒப்பற்ற வார்த்தை இந்த மண்ணுலத்தில் வாழும் மக்கள் எல்லோரும் உஜ்ஜீவனத்தை அடையுமாறு தி ரு வாய்: மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு : -

" வரும் இவள் கம்மைப் பேணும்

அம்மைகாண்; உமைமே. மற்றிப் பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை அருகுவக் தணைய கோக்கி,

"அம்மையே!' என்னும் செம்மை ஒருமொழி உலகம் எல்லாம் ; : உய்யவே அருளிச் செய்தார்.'

வரும் - இந்தக் கைலாச மலையின் மேல் ஏறிவரும். இவள் - இந்தப் பெண்மணி. நம்மை - எம்மை, ப் : சந்தி. பேணும் - விரும்பிப் பாதுகாக்கும். அம்மை - அன்னை. காண் - இதை நீ தெரிந்து கொள்வாயாக. உமையே, உமர் தேவியே. மற்று : அசைநிலை. இப் பெ ரு ைம - இந்தப் பெருமையை சேர் - சேர்ந்து விளங்கும். வடிவம் . பேயின் வடிவத்தை வேண்டி - எம்மிடம் வேண்டிக் கொண்டு. ப் : சந்தி. பெற்றனள் பெற்றாள். என்று. எனக் கைலாச பதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. பின்றை - பிறகு அருகு - தமக்குச் சமீபத்தில், வந்து - அந்தப் பேய் வடிவத்தைக் கொண்ட புனிதவதி. வந்து. அணைய சேர, நோக்கி - அவ்வாறு வருவதைப் பார்த்து அம்மையே. - என் அம்மையே. என்னும் - என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்யும். செம்மை - சிறப்பைப் பெற்ற. ஒரு-ஒப்பற்ற மொழி-வார்த்தையை. உலகம். இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இட ஆகு பெயர். எல்லாம் - எல்லோரும். உய்ய- உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். ஏ அசைநிலை. அருளிச் செய்தார் . அந்தக் கைலாசபதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.