பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恕馆参 பெரிய புராண விளக்கம் - 9

பிறகு உள்ள 59 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அழகிய கண்களைப் பெற்றவனாகிய கைலாசபதி, * அம்மையே என்று திருவாய் மளர்த்தருளிச் செய்ய, அந்தப் பேய் வடிவத்தைக் கொண்ட புனிதவதியார், *அப்பா!' எனச் செந்தாமரை மலர்களைப் போலச் சிவப்பாக இருக்கும் தங்கத்தைப் போன்ற கைலாச பதியாருடைய திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்கிப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருந்த அந்தப் புனிதவதியாரை சங்குகளாகிய வெண்மை நிறத்தைக் கொண்ட குழைகளைத் தம்முடைய திருச்செவிகளில் அணிந்துகொண்டிருக்கும் கைலாசபதியாரும் அ ந் த ப் புனிதவதியாருக்கு எதிரில் அவரைப் பார்த்து, எம்மிடம் இந்தக் கைலாச மலையில் நீ அடைய விரும்புவது என்ன?" என்று அந்தக் கைலாசபதியார் வினவியருள, அவரைப் புனிதவதியார் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு பின்வருமாறு. திருவாய் மலர்ந்தருளிச் செய்கிறவரானார். பாடல் வருமாறு: . . .

  • அங்கணன், அம்மையே என்று - அருள்செய அப்பா' என்று

பங்கயச் செம்பொற் பாதம்

பணிந்துவீழ்க் தெழுந்தார் தம்மைச் சங்கவெண் குழையி னாரும்

தாமெதிர் நோக்கி, கம்பால் இங்குவேண் டுவதென்?" என்ன

இறைஞ்சிகின் றியம்பு கின்றார்.'

அம் - அழகிய, கனன் - கண்களைப் பெற்றவனாகிய கைலாசபதி. க ண ன் : இடைக்குறை. க ண் : ஒரு ைம பன்மை மயக்கம். அம்மையே என்று - அம்மையே’ என, அருள்செய - திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. செய : இடிைக்குறை. அப்பா என்று..அப்பா என பங்கய.செந்