பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 பெரியபுராண விளக்கம் - இ.

விளங்கும் கைலாசபதியே, தேவரீர் திருநடனம் புரிந்தருளும் காலத்தில் தேவரீருடைய திருவடிகளின் கீழே அடியேன் இருக்கவேண்டும்.’’ என்று கைலாசபதியாரை அந்தப் புனிதவதியார் வேண்டிக்கொண்டார். பாடல் வருமாறு:

"இறவாத இன்ப அன்பு * - .

வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாம்ை வேண்டும்; இன்னும் . . வேண்டும்கான் மகிழ்ந்து பாடி அறவா.கி ஆடும்போதுன் - * .

அடியின்கீழ் இருக்க. என்றார்." இறவாத - அந்தப் புனிதவதியார் என்றும் போகாத இன்ப . ஆனந்தத்தை வழங்கும். அன்பு - பக்தியை. வேண்டி - கைலாசபதியாரிடம் வேண்டிக்கொண்டு. .ப் : சந்தி. பின் பிறகும். வேண்டுகின்றார். அந்தக் கைலாச பதியாரிடம் பின் வருமாறு வேண்டிக்கொள்கிறவராகி முற்றெச்சம். பிறவாமை - அடியேன் இனிமேல் இந்த மண்ணுலகத்தில் மானிடப் பிறவியை எடுக்காமை. வேண்டும் - தேவரீர் அடியேனுக்கு வழங்கியருள வேண்டும். மீண்டும் - மறுபடியும். பிறப்பு - இந்த மண்ணுலகத்தில் மானிடப் பெண்ணாய்ப் பிறக்கும் பிறப்பு. உண்டேல் . இருக்குமானால். உன்னை - தேவரீரை. என்றும். எந்தக் காலத்திலும். மறவாவை - ம ற க் காம் ல் இரு க் கும் தன்மையை. வேண்டும் - தேவ ரீர் அ டியே னு க்கு வழங்கியருள வேண்டும். இன்னும் - இவற்றிற்கு மேலும். நான் - அடியேன். மகிழ்ந்து - மகிழ்ச்சியை அ ைட ந் து. பாடி - தேவரீரைப் பல பாசுரங்களைப் பாடி, அறவா. தரும ஸ்வரூபமாக விளங்கும் கைலாசப்தியே. நீ - தேவரீர். ஆடும் - திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண் ட் வம் புரிந்தருளும், போது - காலத்தில், உன் தேவரீருடைய. அடியின்கீழ் - திருவடிகளுக்குக் கீழே: ஒருமை பன்மை