பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - I 33

மயக்கம். இருக்க - அடியேன் இருக்குமாறு தேவரீர் அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளை வழங்கியருள வேண்டும். என்றார் - என்று அந்தப் புனிதவதியார் அந்தக் கைலாசபதியாரை வேண்டிக்கொண்டார். -

பிறகு வரும் 61 - கவியின் உள்ளுறை வருமாறு : "தன்னைப் புகழ்ந்து பாடும் அடியவர்களினுடைங் பற்றுக் கோடாகிநின்றவனாகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அந்தப் புனிதவதியாருக்குத் தன்னை வந்து சேரு. மாறு தன்னுடைய திருவருளை வழங்கிவிட்டு, பக்தர்கள் குலாவுகின்ற செந்தமிழ் நாட்டின் தெற்குத் திசையில் எல்லாக்காலத்திலும் நெடுங்காலமாகப் பக்தர்கள் வாழும் வயல்களைப் பெற்ற பழைய ஊராக நிலைத்து விளங்கிய திருவாலங்காட்டில் யாம் திருநடனம் புரியும் பெருமையைப் பெற்ற ஊர்த்துவ தாண்டவத்தையும் நீ தரிசித்து பேரானந்தத்தை அடைந்து எல்லாக் காலத்திலும் எம்ம்ை நீ பாசுரங்களைப் பாடுவாயாக" என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்தான். பாடல் வருமாறு: -

கூடுமா றருள்கொ டுத்துக் -

குலவுதென் திசையில் என்றும் நீடுவாழ் பழன மூதூர் -

கிலவிய ஆலங் காட்டில் ஆடுமா கடமும் நீகண்

டானக்தம் சேர்ந்தெப் போதும் பாடுவாய் கம்மை" என்றான்

பரவுவார் பற்றாய் கின்றான்." இந்தப் பாடவில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந்துள்ளது. பரவுவார் - தன்னைப் புகழ்ந்து பாடும். அடியவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம், பற்றாய் - பற்றுக் கோடாகி. நின்றான் - நின்றவனாகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி. கூடுமாறு-அந்தப் புனிதவதி யாருக்குத் தன்னை வந்து சேருமாறு. அருள் - தன்னுடைய

பெ. புரா - 8 - 9