பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரிய புராண விளக்கம் - 9

திருவருளை. கொடுத்து . வ ழ ங் கி வி ட் டு, க் ச ந் தி. குலவு - பக்தர்கள் ஒருவரோடு ஒருவர் குலாவுகின்ற. தென் திசையில் . செந்தமிழ் நாட்டின் தெற்குத் தி ைச யி ல். என்றும் - எல்லாக் காலத்திலும். நீடு - நெடுங்காலமாக, வாழ். பக்தர்கள் வாழும். பக்தர்கள்: தோன்றா எழுவாய். பழன - பலவகையான வயல்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்களாவன: சம்பாநெற்பயிர் வளர்ந்து நிற்கும் வயல், குறுவை நெற்பயிர் வளர்ந்து திற்கும் வயல், ம்ணக்கத்தை நெற்பயிர் வளைந்து நிற்கும் வயல், கரும்புத் தோட்டம் முதலியவை. மூதூர் - பழைய ஊராக. நிலவிய . நிலைத்து விளங்கிய. ஆலங்காட்டில் -

திருவாலங்காட்டில். ஆடும் - யாம் திருநடனம் புரியும். மா - பெருமையைப் பெற்ற. த ட மு ம் - ஊ ர் த் து வ தாண்டவத்தையும். நீ கண்டு - நீ தரிசித்து. ஆனந்தம் - பேரானந்தத்தை. சேர்ந்து - அடைந்து. எப்போதும் - எந்தக் காலத்திலும். பாடுவாய் நம்மை - எம்மை நீ பாசுரங்களால் பாடுவாயாக, என்றான் - என்று அத்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். . .

ஒரு செட்டிப்பிள்ளைக்குத் தாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும்பொருட்டு தங்கள் உயிர்களைக் கொடுத்த எழுபது வேளாளர்கள் வாழ் ந் து வந்த பழையனூர் இந்தத் திருவாலங்காட்டிற்குக் கிழக்குத் திசையில் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. இந்த ஊரிலும் ஒரு சிவாலயம் இருக்கிறது. இவ்வாறு, பழையனூர் இயல்பு மொழி காத்த கதை' யைத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்,

துஞ்ச வருவாரும் தொழுவிப்

பாரும் வழுவிப் போய்

நெஞ்சம் புகுந் தென்னை

நினைவிப் பாரும் முனை நட்பாய்