பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்க்ால் அம்மையார் புராணம் 芷諡岳

வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகை வேட்டு அங்கம் பழையனுரர் ஆலங்

காட்டெம் அடிகளே.' என்று பாடியருளிய பாசுரத்தால் விளங்கும்.

திருவாலங்காடு : இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் தேவர்சிங்கப் பெருமாள், ஊர்த்துவ தாண்டவேசுவரர், ஊ ர் த் து வ தாண்டவ மூர்த்தியார் என்பவை. அம்பிகை வண்டார் குழலியம்மை, தீர்த்தம் முத்தி தீர்த்தம். தலவிருட்சம் பலாமரம். இது பழையனுள் ரைச் சார்ந்த திருவாலங்காடு என்னும் சிவத்தலம் ஆகும். திருவாலங்காட்டுக்கு வட க் கி ல் 3 மை ல் துர ர த் தி ல் பழையனுர் இருக்கிறது. இது பஞ்சசபைகளில் ஒன்றாகிய இரத்தின சபையை உடைய தலம். ஊர்த்துவ தாண்ட வேசுவரர் காளியுடன் திருநடனம் புரிந்தருளிய தலம் இது. 'ஆடினார் காண காண ஆலங்காட்டடிகளாரே...' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. காரைக்காலம்மையார் கைலாச மலையிலிருந்து தலையாலே நடந்து வந்து ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைத் திருவாலங்காட்டில் தரிசித்து அவருடைய குஞ்சித பாதத்தின் கீழ்ச் சிவானத் தத்தை நுகர்ந்துகொண்டு விளங்கும் தலம் இது, பிறகு வரும் 62 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

தம்மைத் திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய திருவடிகளின்கீழ் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட அந்த ஊர்த்துவ தாண்டவமூர்த்தியார் தனக்கு வழங்கியருள அந்தத் திருவருளைப் பெற்ற காரைக்கால் அம்மையும் சிறப்பான தன்மையைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களினுடைய உண்மையான அர்த்தமாக விளங்குபவராகிய,