பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - 137

கொண்டு, வ ண ங் கி . அந் த மூர்த்தியாரைப் பணிந்துவிட்டு, ப் : சந்தி. போந்து - மேலே எழுந்தருளி. செப்பரும் - சொல்லுவதற்கு அருமையாக இருக்கும். செப்பரும் - செப்ப அரும்: தொகுத்தல் வி கார ம், பெருமை - பெருமையைப் பெற்ற, அன்பால்-பக்தியோடு: உருபு மயக்கம். திகழ் . புகழோடு விளங்கும். திருவாலங் காடாம் - திருவாலங்காடு ஆகும். நல் - நல்ல. பதி - சிவத் தலத்திற்கு. தலையினால்-அந்தக் காரைக்கால் அம்மையார் தம்முடைய தலையினால். ஏ : அசைநிலை. நடந்து-நட்ந்து சென்று. புக்கு அந்த ஊருக்குள் நுழைந்து. அடைந்தார். திருவாலங்காட்டைக் கா ைர க் கா ல் அம் ைம ய | ர் சேர்ந்தார். அன்று, ஏ இரண்டும் சற்றசை நிலைகள்.

அடுத்து உள்ள 63 - ஆம் கவியின் கருத்து வருமாறு: திருவாலங்காட்டில் வானத்தை உறுமாறு நிமிர்ந்து ஊர்த்துவ தாண்டவத்தைப் புரிந்தருளுகின்ற அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரினுடைய திருக்கோலத் தைக் காரைக்கால் அம்மையார் தரிசித்த சமயத்தில், 'கொங்கைதிரங்கி எனத் தொடங்கி தாம் தங்கியிருக்கும் மூலத்தை யாராலும் பர்ர்ப்பதற்கு அரியவராகிய அந்த உணர்த்துவ தாண்டவ மூர்த்தியாரை, மூத்த நல்ல திருப் பதிகத்தை அந்த அம்மையார் பாடியருளி இந்த மண்ணுல் கத்தில் வாழும் மக்கள் விரும்பி வாழ்த்தி வணங்கும் அந்த ஊர்த்துவ தாண்டவத்தைக் காரைக்கால் அம்மையார் வாழ்த்தி வணங்கி அந்தத் தி ருவா ல ங் காட் டில் தங்கியிருக்கும் காலத்தில். பாடல் வருமாறு :

" ஆலங்கா டதனில் அண்டம்

வறகிமிர்க் தாடு கின்ற கோலம்காண் பொழுது, 'கொங்கை

திரங்கி'என்றெடுத்துத் தங்கு மூலம்காண் புரியார் தம்மை

மூத்தாற் பதிகம் பாடி