பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 * பெரிய புராண விளக்கம் - 9

ஞாலம்கா தலித்துப் போற்றும் - . கடம்போற்றி கண்ணும் காளில்."

இந்தப் பாடல் குளகம். ஆலங்காடதனில் - திருவாலங் காட்டில். அது : பகுதிப் பொருள் விகுதி. அண்டம் - வானத்தை. உற- அடையுமாறு. நிமிர்ந்து - தலையை, நிமிர்த்திக்கொண்டு. ஆடுகின்ற - ஊர்த்துவ தாண்ட வத்தை ஆடியருளுகின்ற, கோலம் - திருக்கோலத்தை. காண் - காரைக்கால் அம்மையார் தரிசிக்கும். பொழுது - சமயத்தில். .ெ காங் ைக திரங்கி என்று எடுத்து - 'கொங்கை திரங்கி" எனத் தொடங்கி. த் : சந்தி. தங்கு - தாம் தங்கியிருக்கும். மூலம் - மூலமான இடத்தை. காண்பு அரியார் - தம்மை யாராலும் பார்ப்பதற்கு அரிய வராகிய அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரை. தம் : அசைநிலை. மூத்தநற்பதிகம் - நல்ல மூத்த திருப் பதிகத்தை. பா டி - இ ந் த ள ப்ப ண் அமையுமாறு பாடியருள. ஞாலம் - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் இட ஆ. கு .ெ ப ய ர். காதலித்து - விரும்பி. ப்.: சந்தி. போற்றும் - வாழ்த்தி வணங்கும். நடம் - ஊர்த்துவ தாண்டவத்தை. போற்றி - அந்தக் காரைக் காலம்மையார் வாழ்த்தி வணங்கி, நண்ணும் - அந்தத் திருவாலங்காட்டில் தங்கி யிருக்கும். நாளில் - காலத்தில்.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட, கொங்கைதிரங்கி என்று தொடங்கும் பாசுரம் அமைந்த திருப்பதிகம் திருவாலங், காட்டு மூத்த திருப்பதிகம். அது நட்டபாடைப் பண்ணில் அமைந்தது. அதில் வரும் முதற்பாசுரத்தில் மேலே சொன்ன கொங்கைதிரங்கி" என்னும் சொற்றொடர் வருகின்றது. அந்தப் பாசுரம் வருமாறு : .

  • கொங்கை திரங்கி நரம்பெ முந்து -

குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப் பங்கிசி வந்திரு பற்கள் நீண்டு

பரடுயர் நீள்கனைக் காலோர் பெண் பேய்