பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 141

கொட்ட முழவம் கூளி பாடக் . குழகன் ஆடுமே.”* . இந்தத் திருப்பதிகத்தில் இறுதியில் உள்ள 11 - ஆம் பாடல் வருமாறு : н

சூடு மதியம் சடைமேல் உடையார்

சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த

அடிகள் அருளாவே காடு மவிந்த கனல்வாய் எயிற்றுக்

காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி ஆடப்

பாவம் நாசமே." . பிறகு வரும் 65 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : “தாங்கிய கங்கையாற்றின் நீரைத் தம்முடைய தலையில் உள்ள சடாபாரத்தில் தங்க வைத்தவராகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியார், அம்மை" என்று இனிய சுவையைப் பெற்ற வார்த்தை வழங்கியருளப் பெற்ற வராகிய காரைக்கால் அம்மையாரை குலாவிய ஊர்த்துவ தாண்டவத்தில் அந்த மூர்த்தியார் தூக்கியருளும் குஞ்சித கரணமாகிய சிவந்த திருவடிகளின் கீழ் எந்தக் காலத்திலும் தங்கியிருக்கிறவராகிய அந்தக் காரைக்கால் அம்மையாரை அவருக்குச் சேர்ந்துள்ள பெருமையைப் பெற்று விளங்கும் சீர்த்தியைப் புகழ்ந்து பாடுதல் யாருடைய அறிவின் அளவிற்குள் அடங்குவது அம்மா பாடல் வருவாறு :

மடுத்தபுனல் வேணியினார்

'அம்மை' என மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரைக்

குலவியதாண் டவத்தில் அவர் எடுத்தருளும் சேவடிக்கீழ்

என்றும்இருக் கின்றாரை அடுத்தபெரும் சீர்பரவல்

ஆரளவாவினதம்மா!'