பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 - பெரிய புராண விளக்கம் . 9

மடுத்த - தாங்கிய புனல் கங்கையாற்றின் நீரை. வேணியினார் - தம்முடைய தலையில் உள்ள சடா பாரத்தில் தங்க வைத்தவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார். அம்மை" என - அம்மை" என்று. என : இடைக்குறை. மதுர - இனிய சுவையைப் பெற்ற, மொழி - வார்த்தையை. கொடுத்தருள - வழங்கியருள. ப் : சந்தி. பெற்றாரை - பெற்றவராகிய காரைக்கால் அம்மையாரை. க் : சந்தி. குலவிய - குலாவிய. தாண்டவத்தில் - ஊர்த்துவ தாண்டவத்தில், அவர் . அந்த மூர்த்தியார். எடுத்தருளும் - துரக்கியருளும். சேவடிக்கீழ் - குஞ்சித பா த மா கி ய சிவந்த திருவடிகளின் கீழ். அடி : ஒருமை பன்மை மயக்கம். என்றும் . எந்தக் காலத்திலும், இருக்கின்றாரை - தங்கிக் கொண் டி ரு க் கிறவராகிய அ ந் த க் கா ைர க் கால் அம்மையாரை. அடுத்த - சேர் ந் துள் ள. பெ ரும் - பெருமையைப் பெற்று விளங்கும். சீர் . சீர்த்தியை. பரவல் - புகழ்ந்து பாடுதல். ஆர் - யாருடைய அளவு - . அறிவின் அளவிற்குள். ஆயினது - அடக்குவது. அம்மா : ஆச்சரியக் குறிப்பு.

இந்தக் காரைக்கால் அம்மையார் புராணத்தில் இறுதியில் உள்ள 66-ஆம் கவி அடுத்து வரும் அப்பூதியடிகள் நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடியருளியது. அந்தப் பாடலில் உள்ள கருத்து வருமாறு :

முதலோடு முடிவும் இல்லாதவனாகிய ஊர் த் து வ தாண்டவ மூர்த்தி தன்னுடைய திருவருளால் ஊர்த்துவ தாண்டவமாகிய திருநடனத்தை ஆடியருளும் சமயத்தில் பாசுரங்களை அவருக்கு முன்னால் பாடியருளும் அம்மை பாகிய காரைக்கால் அம்மையினுடைய பிரகாசம் கிளர்ச் சியைப் பெற்று வீசும் செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டு, இனிமேல் குளிர்ச் சியைப் பெற்ற நீர் பாயும் வயல்கள் சுற்றியிருக்கும் திங்களுரில் வாழும் அப்பூதியடிகள் நாயனாராகும் மெய்ஞ்ஞானத்தை உடைய பெருமையைக் கொண்ட