பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 5 - ஆவதாக உள்ள திருகின்ற சருக்கத்தில் 5 - ஆவதாக விள ங் கு வது அப்பூதியடிகள் நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாட்டின் உள்ளுறை வருமாறு : . r

  • ஆனந்தத் தாண்டவத்தைப் புரிந்தருள வல்ல தம்பிரானாராகிய நடராஜப் பெருமானாருக்குப் பக்தர்: கூடிய புகழினுடைய பக்கங்களைப் பெற்றவர்; வரம்பு இல்லாத தவத்தில் மிகச் சிறந்து நிற்பவர்; திருவதிகை வீரட்டர்னேசுவரர் தடுத்து ஆட்கொண்ட சீர்த்தியைப் பெற்ற திருநாவுக்கரசு நாயனாருடைய திருவடிகளைத் தியானித்து அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்மைத் தெரிந்து கொள்ளாததற்கு முன்பே எண்ணத்தக்க விருப்பம் அவர் பால் மிகுதியாக உண்டாகச் சேர்ந்த பக்தியை உடையவராகி இருப்பவர் அந்த அப்பூதியடிகள் நாயனார்."

பாடல் வருமாறு :

ச! தாண்டவம் புரிய வல்ல

தம்பிரானாருக் கன்பர் ஈண்டிய புகழின் பாலார்: . .

எல்லையில் தவத்தின் மிக்கார்: ஆண்டசிர் அரசின் பாதம்

அடைந்தவர் அறியா முன்னே காண்டகு காதல் கூரக் -

கலந்தஅன் பினராய் உள்ளார்.'