பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் - 145,

தாண்டவம் - ஆனந்தத் தாண்டவத்தை. புரிய . செய்தருள. வ ல் ல - வ ல் ல மை யைப் பெ ற் ற. தம்பிரானாருக்கு - த ைல வ ரா கி ய ந - ர ா ஜ ப் பெருமானாருக்கு. அன் பர் - ப க் த ர் அப்பூதியடிகள் நாயனார். அப்பூதியடிகள் நாய னார்: தோன்றா எழுவாய். சண்டிய . கூடிய. புகழின் - புகழினுடைய. பாலார் - பகுதிகளைப் பெற்றவர். பால் : ஒருமை பன்மை மயக்கம். எல்லை - ஒரு வரம்பு. இல் - இல்லாத; கடைக்குற்ை. தவத்தின் - தவத்தினால். மிக்கார் . மிக்க சிறப்பை அடைந்தவர். ஆண்ட - திருவதிகை வீரட்டானே Gentirtř தடுத்து ஆட் .ெ கா எண் - அ ர சி ன் - திருநாவுக்கரசு நாயனாருடைய திணை மயக்கம். பாதம் - திருவடிகளை; ஒருமை பன்மை ம யக் கம், அடைந்து - தியானித்து. அவர் - அந்தத் திருநாவுக்கரசு நாயனார். அறியா. தம்மைத் தெரிந்து கொள்ளாததற்கு. முன் - முன்பே. ஏ : அசைநிலை. காண்தகு-எண்ணத்தக்க. காதல் . அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம் விருப்பம். கர - மிகுதியாக உண்டாக, க் : சந்தி, கலந்த - தம்முடைய திருவுள்ளத்தில் சேர்ந்துள்ள. அன்பினராய் . பக்தியை உடையவராய். உள்ளார் . இருப்பவர் அந்த அப்பூதி அடிகள் நாயனார். அப்பூதி அடிகள் நாயனார் ; தோன்றா எழுவாய். -

அடுத்து வரும்.2- ஆம் கவியின் கருத்து வருமாறு :

அந்த அப்பூதியடிகள் நாயனார், திருடுதல், பொய் வார்த்தைகளைப் பேசுதல், மகளிரிடம் முறையற்ற காம. மயக்கத்தை உடையவராக இருத்தல், வெகுளியை அடைதல் முதலிய குற்றங்களை வெறுத்தவர். செல்வ வளம் மிகுதியாக உள்ள இல்லற வாழ்க்கையாகிய நிலையைப் பெற்றவர்; தம்முடைய திருமாளிகையினிடம் இருக்கிற அளக்கும் படிகள், நிறுத்துப் பார்க்கும் துலாக் கோல், புதல்வர்கள், பசுமாட்டோடு எருமைமாடு, வேறாகவும் இருக்கிற எல்லாப் பண்டங்களுக்கும் திருநாவுக்,