பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 146 - பெரிய புராண விளக்கம் - 9.

s内éー நாயனாருடைய திருநாமத்தை வைத்துக்கூறும் அந்த ஒழுக்கமாகிய வழியில் நிற்பவர். பாடல் வருமாறு :

களவுபொய் காமம் கோபம்

முதலிய குற்றம் காய்க்தார்: வளம்மிகு மனையின் வாழ்க்கை

நிலையினார், மனைப்பால் உள்ள அளவைகள் கிறைகோல் மக்கள் .

ஆவொடு மேதி மற்றும் உனவெலாம் அரசின் க்ாமம் .

சாற்றும்அவ் வொழுக்க லாற்றார்.'

களவு - அந்த அப்பூதியடிகள் நாயனார் பிறருடைய பொருள்களைத் திருடுதல். அப்பூதியடிகள் நாயனார்: தோன்றா எழுவாய். பொய் - பொய் வார்த்தைகளைப் பேசுதல்; ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். காமம் - பிற மகளிரிடம் முறையற்ற காமமயக்கத்தை உடையவராக இருத்தல்: ஆகுபெயர். கோபம் - சினத்தை அடைதல்; ஆகுபெயர். முதலிய - முதலாக உள்ள. குற்றம் - குற்றங்களை ஒருமை பன்மை மயக்கம். காய்ந்தார் . வெறுத்தவர். வளம் - செல்வ வளம். மிகு . மிகுதியாக உள்ள. மனையின் வாழ்க்கை -இல்லற வாழ்க்கையாகிய. நிலையினார் - நிலையைப் பெற்றவர். மனைப்பால் : தம்முடைய திருமாளிகையினிடம். உள்ள . இருக்கிற. அளவைகள் - அளக்கும் படிகள். நிறைகோல் - நிறுத்துப் பார்க்கும் துலாக்கோல் தராசு. மக்கள் - புதல்வர்கள். ஆவொடு - ப சு மாட் டோ டு, மேதி - எருமைமாடு. மற்றும் - வேறாகவும். உள - இருக்கிற இடைக்குறை. எலாம் - எல்லாப் பண்டங்களுக்கும். இடைக்குறை. அரசின்-திருநாவுக்கரசு நாயனாருடைய திணை மயக்கம். நாமம் - திருநாமத்தை. சாற்றும் - வைத்து அழைக்கும். அவ்வொழுக்கலாற்றார் - அந்த ஒழுக்கமாகிய வழியில் நிலைத்து நிற்பவர். . . . . . . :