பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் - r 14 f

பிறகு வரும் 3-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : திருவுருவத்தைத் தாம் பாராதவராக இருந்தாலும் நிலைபெற்ற சீர்த்தியை உடைய திருவாக்கின் அரசராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய அடிமைத் திறத்தையும் தம்பிரானாராகிய திருவதிகை விரட்டானேசுவரர் அந்த நாயனாருக்கு வழங்கிய திருவருளையும் கேள்விப்பட்டு அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருநாமத்தோடு அளக்கும் படிகள், தாம் வாழும் திருமடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், முதலாக இருக்கிற முடிவு இல்லாத தருமங் களைப் புரிந்து முறைப்படி தம்முடைய வாழ்க்கையை நடத்தி வரும் காலத்தில். பாடல் வருமாறு :

வடிவுதாம் கானா ராயும்

மன்னுசீர் வாக்கின் வேக்தர் அடிமையும் தம்பி ரானார்

அருளும்கேட் டவர்கா மத்தால் படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்

பக்தர்கள் முதலா யுள்ள முடிவிலா அறங்கள் செய்து

முறைமையால் வாழும் நாளில்.'

இந்தப் பாடல் குளகம். வடிவு . திருமேனியின் வடிவத்தை. தாம்' என்ற்து அப்பூதியடிகள் நாயனாரை. காணாராயும் - பாராதவராக இருந்தாலும். ம ன் ஆறு ம நிலைபெற்று விளங்கும். சீர் - சீர்த் தி ையப் பெ ற் ற: வாக்கின் வேந்தர் - திருவாக்குக்கு அரசராகிய திருநாவுக் கரசு நாயனாருட்ைய, அடிமையும் - அடிமைத் திறத்தை யும். தம்பிரானார்-அவருடைய தலைவராகிய திருவதிகை வீரட்டானேசுவரர். அருளும் - அந்த நாயனா ரு க்கு வழங்கிய திருவருளையும். கே ட் டு - கேள்விப்பட்டு. அவர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய. நாமத்தால் - திருநாமத்தோடு உருபு மயக்கம். படி - அளக்கும் படிகள்: ஒருமை பன்மை மயக்கம். நிகழ் - தாம் தங்கும். மடங்கள் - திருமடங்கள். தண்ணீர்ப் பந்தர்கள் . வழிப்