பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெரிய புராண விளக்கம் . 9

போக்கர்களுக்குத் தண்ணிரை வழங்கும் பந்தல்கள். முதலாய் உள்ள - முதலாக இருக்கிற. முடிவு இலா . முடிவு இல்லாத. இலா இடைக்குறை. அறங்கள். தருமங்களை. செய்து-புரிந்து கொண்டு. முறைமையால் . முறையோடு: உருபு மயக்கம். வாழும் - தம்முடைய வாழ்க்கையை நடத்தி வரும். நாளில் . கா லத் தி ல்,

பிறகு உள்ள 4-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

- இமயமலையரசனுடைய மடப்பத்தைப் பெற்ற பெண் யானையாகிய பார்வதி தேவியாரோடு கூடும் சிவபெருமானாகிய ஆண் யானையினுடைய திருத்தல மாகிய திருப்பழனத்துக்கு அந்த அப்பூதியடிகள் நாயனார் எழுந்தருளி அந்தத் தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஆபத்சகாயேசுவரரை வ ண ங் கி விட்டுத் தமக்குரிய உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும் புரிந்து கொண்டிருக்கும் திருநாவுக்கரசு நாயனாரிடத்தில் ஒருமைப் பாட்டோடு அ ைம ந் த விருப்பத்தால் வேறாக இருக்கும் தம்மை ஆளாக உடைய வராகிய சிவபெருமானாருடைய தலங்களை அடைந்து அங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைப் பணியும் வி ரு ப் பத் தோ டு ம் திங்களுரின் பக்கத்தில் உள்ள வழி யி ல், அந் த த் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளுவாரானார். பாடல் வருமாறு : 3.

பொருப்பரையன் மடப்பிடிபி

னுடன்புணரும் சிவக்களிற்றின்

திருப்பழனம் பணிந்துபணி -

- செய்திருகா வுக்கரசர் ஒருப்படுகா தலிற்பிறவும்

உடையவர்தம் பதிவணங்கும் விருப்பினொடும் திங்களுர்

மருங்குவழி மேவுவார்.