பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 153

என்னும்; இடைக்குறை. பெயரால் - திருநாமத்தோடு: உருபு மயக்கம். செப்பரும் - சொல்லுவதற்கு அருமையாக இருக்கும். செப்பரும் - செப்ப அரும்; தொகுத் த ல் விகாரம். சீர் - சீர்த்தியைப் பெற்ற. அப்பூதி அடிகளார் - அப்பூதி அடிகள் நாயனார். தப்பு . ஒரு தவறும். இன்றிஇல்லாமல். எங்கும் . எந்த இடங்களிலும்; ஒரு ைம பன்மை மயக்கம், உள - இருக்கிற இடைக் கு ைற. சாலை - நடக்கும் சாலையையும். குளம் - குளத்தையும். கா - பூ ஞ் சோ ைல ைய யு ம். செய்து - உண்டு பண்ணி. அமைத்தார் - அம்ைத்து வைத்திருக்கிறார். என்றார் - என்று அந்த மக்கள் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். - - -

பிறகு வரும் 8 - ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு :

"அந்த மக்கள் என அவ்வாறு கூறத் திருநாவுக்கரசு நாயனார் அதனைக் கேட்டருளி, இவ்வாறு செய்ததற்கு என்ன கருத்து' என அந்த இடத்தில் நின்று கொண்டி ருந்த மக்களைப் பார்த்து, இந்தத் தண்ணிர்ப் பந்தலை வைத்திருக்கும் அந்த மனிதர் எந்த ஊரில் இருக்கிறார்?" என்று அந்த நாயனார் கேட்டருள, அமைந்த பூலுரலை அணிந்த மார்பைப் பெற்ற அப்பூதியடிகள் நாயனாரும் இந்தப் பழைய சிவத்தலமாகிய திங்களூரில் வாழ்கிறவர்: அவர் தம்முடைய திருமாளிகைக்கு இப்போதுதான் போனார்; அந்தத் திருமாளிகையும் நெடுந்துாரத்தில் இருப்பது அன்று: சமீபத்தில்தான் உள்ளது.' என்று அந்த மக்கள் திருநாவுக்கரசு நாயனாரிடம் கூறினார்கள்.” பாடல் வருமாறு : -

என்றுரைக்க அரசுகேட் -

டி.தற்கென்னோ கருத் தென்று கின்றவரை கோக்கி, அவர்

எவ்விடத்தார்?' எனவினவத்