பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரிய புராண Saräää ... &

அதைக் கேட்டருளி. நண்ணினார் - அந்த அப்பூதியடிக நாயனார் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

பிறகு உள்ள 10 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"அந்த அப்பூதியடிகள் நாயனார் அவ்வாறு வேகமாக வந்து சேர்ந்து வாகீசர்ாகிய திருநாவுக்கரசு நாயனா ருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை வணங்க, அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய திருவடிகளை வணங்குவதற்கு முன்பே அவரை வணங்கும் திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில் அந்தணராகிய அப்பூதியடிகள் நாயனார், அடியேன் ஒரு முடிவே இல்லாத தவத்தை முன் பிறவியிற் புசிந்தேனோ முன்னால் மழையைப் போலச் சொரியும் கருணையைச் செய்தருளும் திருவடிவத்தை உடையவரே, அடியேனு டைய திருமாளிகைக்குத் தேவரீர் எழுந்தருளி வந்து அருளியது என்ன ஆச்சரியம்!' என்று அந்த அப்பூதி யடிகள் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்." பாடல் வருமாறு : -

  • கடிதணைந்து வாகீசர்

கழல்பணிய மற்றவர்தம் அடிபணியா முன்பணியும்

அரசின்எதிர் அக்தணனார் முடிவில்தவம் செய்தேன்கொல்?

முன்பொழியும் கருணைபுரி வடிவுடையீர், என்மனையில் - வந்தருளிற் றென்!” என்றார்." கடிது - அந்த அப்பூதியடிகள் நாயனார். அவ்வாறு வேகமாக, அணைந்து - வந்து சேர்ந்து. வாகீசர் - வாகீச ராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய. கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை: ஆகுபெயர். பணிய - அந்த அப்பூதியடிகள் நாயனார் வணங்க, மற்று : அசைநிலை, அவர் - அந்த அப்பூதியடிகள் நாயனார்.