பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் - 15y

தம் - தம்முடைய. அடி - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணியாமுன் - வணங்குவதற்கு முன்பே. பணி யும் - அவரை வணங்கும். அரசின் - திருநாவுக்கரசு நாய னாருக்கு: திணை மயக்கம். எதிர்-எதிரில். அந்தணனார் - வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார். முடிவு - அடி யேன் ஒரு முடிவே. இல் - இல்லாத கடைக்குறை. தவம் - தவத்தை. செய்தேன்கொல் . முன் பிறவியில் புரிந் தேனோ?. முன் - முன்னால். பொழியும் - மழையைப் போலச் சொகியும். கருணைபுரி - கருணையைச் செப் தருளும். வடிவு - திருவடிவத்தை, உடையீர் உடைய வரே. என் . அடியேனுடைய, மனையில் . திருமாளி கைக்கு உருபு மயக்கம். வந்து அருளிற்று - எழுந்தருளி வந்து அருளியது. என் - என்ன ஆச்சரியம்! என்றார் - என்று அந்த அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மலர்த் தருளிச் செய்தார். . -

அடுத்து உள்ள 11 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

ஒப்பற்ற மேரு மலையாகிய வில்லை ஏந்திய வராகிய ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் விளங்கும் திருப்பழனத்துக்கு உள்ளே சென்று அந்த ஆபத்சகாயேசு வரரை வணங்கிவிட்டு யாம் வருகிறோம். மக்கள் நடந்து செல்லும் வழியாகிய இடத்தில் நீர் கட்டி வைத்துள்ள வாய்ப்பாக அமைந்த வளத்தை வழங்குகின்ற நிழலைப் பெற்ற தண்ணிர்ப் பந்தலையும் யாம் பார்த்து விட்டு அந்தப் பான்மையோடு நீர் செய்கின்ற வேறு தர்மங் களைப் பற்றியும் யாம் கேள்விப்பட்டு இந்தத் திங்களுருக்கு வந்து சேர்ந்தோம்' என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார்." பாடல் வருமாறு :

ஒருகுன்ற வில்லாரைத்

திருப்பழனத் துள்ளிறைஞ்சி வருகின்றோம்; வழிக்கரையில் இர்வைத்த வாய்க்தவனம்