பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

望60 - . பெசிய புராண விளக்கம் - 8

பிறகு வரும் 18 ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார், திருநாவுக்கரசு தாயனார் கேட்டருளிய வினாவைக் கேட்டுத் தம்முடைய நிலை அழிந்து போன திருவுள்ளத்தைப் பெற்றவராகி, நீர் நல்ல வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய வில்லை; சிறிதும் வெட்கம் இல்லாத சமணர்களாகிய பாதகர்களோடு சேர்ந்து கொண்டிருந்த பல்லவ அரசனு டைய சூழ்ச்சியைத் தம்முடையதிருத்தொண்டுகளினுடைய மிகுதியினால் வெற்றி பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய திருநாமமோ வேறு ஒரு திருநாமம்?" என்று அந்த அப்பூதியடிகள் நாயனார் கோபம் மூண்டவராயினார். பாடல் வருமாறு :

. கின்றமறை யோர்கே ளா

நிலைஅழிந்த சிங்தையராய்

கன்றருளிச் செய்திலிர்!

கானமில் அமண்பதகருடன்

ஒன்றியமன் னவன்சூட்சி

திருத்தொண்டின் உறைப்பாலே

வென்றவர்தம் திருப்பேரோ . வேறொருபேர்?' எனவெகுள்வார்.'

நின்ற அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மறை யோர் . வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார். கேளா. 'திருநாவுக்கரசு நாயனார் கேட்டருளிய வினாவைக் கேட்டு, நிலை - தம்முடைய இயல்பான நிலை. அழிந்த - அழிந்து போன சிந்தையராய் - திருவுள்ளத்தைப் பெற்ற வராகி. நன்று - நல்ல வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். அருளிச் செய்தினீர் - நீர் திருவாய் மலர்ந்தருளிச் செய்யவில்லை. நாணம் - சிறிதேனும் வெட்கம். இல் - இல்லாத கடைக்குறை. அமண் - சமணர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம் திணை மயக்கம். பதகருடன் .