பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரிய புராண விளக்கம் - 9

நீர் தாம் . நீங்கள். தாம் : அசை நிலை. யார் - ஆர். இயம்பும் . அதனைச் சொல் வீ க. எ ன - எ ன் று: இடைக்குறை. இயம்பினார் . அந்த அ ப் பூ தி ய டி. க ள் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். -

பிறகு உள்ள 16 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"அழகிய வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார் அந்த வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்யத் திருநாவுக்கரசு நாயனார் அந்த அப்பூதியடிகள் நாயனாரு டைய பெருமையைத் தெரிந்து கொண்டு பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வார்; வேறு துறையாகிய சமண சமயமாகிய சமுத்திரத்தின் துறையிலிருந்து கரை யேறுமாறு திருவதிகை வீரட்டானேசுவரர் அருள் புரிந்த பெரியதாக இருக்கும் சூலை நோயின்ால் தம்முடைய ஆளாகக் கொள்ள அந்தப் பாக்கியத்தைப் பெற்று உஜ்ஜீவனத்தை அடைந்த தெளிவை அடையும் உணர்ச்சி சிறிதும் இல்லாத சிறுமையைப் பெற்ற அடியேன்" என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு :

  • திருமறையோர் அதுமொழியத்

திருகாவுக் கரசர் அவர் பெரும்ைஅறிக் துரைசெய்வார்

"பிற துறையி னின்றேற அருள்பெரும் சூலையினால்

ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும்உணர் வில்லாத

சிறுமையேன் யான்."என்றார்.' . . . திரு - அழகிய செல்வத்தைப் பெற்ற எனலும் ஆம். மறையோர்-வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார். அது . அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். மொழிய - திருவாய் மலர்ந்தருளிச் செய்ய த் : சந்தி.

திருநாவுக்கரசர்-திருதாவுக்கரக தாயனார். அவர்.