பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 16

அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய. பெ ரு ைம . பெருமையை. அறிந்து - தெரிந்து கொண் டு. உ ைர செய்வார் - பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வார். பிற - வேறு. துறையில் நின்று - துறையாகிய சமண சமயம் என்னும் சமுத்திரத்தினுடைய துறையின் ரு ந் து. ஏற - கரை ஏறுமாறு. அரு ளு - தி ரு வ தி கை வீராட்டனேசுவரர் அருள் புரிந்த பெரும் - பெரியதாக இருக்கும். சூலையினால் - சூலை நோயால்; கடுமையான வயிற்று வலியினால். ஆட்கொள்ள - தம்முடைய ஆளர்க ஏற்றுக் கொள்ள. அடைந்து - அந்த பாக்கியத்தைப் பெற்று. உய்ந்த - உஜ்ஜீவனத்தை அடைந்த தெருளும் . தெளிவை அடையும், உணர்வு - உணர்ச்சி. இல்லாத . சிறிதே னும் இ ல் லா த. சிறு ைமயே ன் - சிறுமையைப் பெற்றவன். யான் . அடியேன். என்றார் . என்று திருநாவுக்கரசு நாயன்ார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். .

அடுத்து உள்ள 17 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் தெ ந் து கொள்ளும் வண்ணம் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அந்த அப்பூதி அடிகள் நாயனார் தம்முடைய திருக்கைகள் ஆகிய செந்தாமரை மலர்கள் தம்முடைய தலையின் மேற் குவித்துக் கும்பிட தம்முடைய கண்கள் மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போல நீரைச் சொரிந்து அந்த நீர் தரையில் இறங்கி ஓடத் தம்முடைய வார்த்தைகள் குழறிப் போய் தம்முடைய திருமேனி முழுவதும் ரோமங்கள் புள காங்கிதத்தை அடைந்து விளங்கத் தரையின் மேற் விழுந்த அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவடிகளாகிய செந்தாமரை மலர்களைத் தம்முடைய தலையின் மேல் அணிந்து கொண்டு வணங்கினார். பாடல் வருமாறு :

அரசிறிய உரைசெய்ய .

s'. ' அப்பூதி அடிகள்தாம்

பெ. புரா , 9 - 11 --