பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்:

கரகமலம் மிசைகுவியக்

கண்ணருவி பொழிந்திழிய, உரைகுழறி உடம்பெல்லாம்

உரோமபுள கம்பொலியத் தரையின்மிசைவிழ்ந்தவர்தம்

சரணகம லம்பூண்டார்.' அரசு - அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார்: தின்ை மயக்கம். அறிய -அந்த அப்பூதியடிகள் நா யனார். தெரிந்து கொள்ளும் வண்ணம். உரை செய்ய-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. அப்பூதியடிகள்தாம் . அப்பூதி படிகள் நாயனார். தாம் : அசை நிலை. கர - தம்முடைய திருக்கைகளாகிய, ஒருமை பன்மை ம்யக்கம். கமலம், செந்தாமரை மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மிசை : தம்முடைய தலையின் மேல். குவிய கூப்பிக் கும்பிட். க்: சந்தி. கண். தம்முடைய கண்கள்: ஒருமை பன்ம்ை. மயக்கம். அருவி - மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போல; உவம ஆகுபெயர். பொழிந்து . நீரைச் சொரிந்து. இழிய அந்த நீர் தரையில் இறங்கி ஒட. உரை - தம் முடைய வார்த்தைகள்; ஒருமை பன்மை மயக்கம். குழறி - தடுமாற்றத்தை அடைந்து. உடம்பு எல்லாம்: தம்முடைய தி ரு மே ணி முழு வ தும். உரோம - உரோமங்கள். புள கம் - புளகாங் கி த த்தை அடைந்து, மயிர்க் கூச்சைப்பெற்று. பொலிய - விளங்க த் சந்தி. தரையின் மிசை - தரையின் மேல். வீழ்ந்தவர். தம் - விழுந்த அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய. தம்: அசை நிலை, சரண - திருவடிகளாகிய ஒருமை பன்ம்ை மயக்கம். கமலம் . செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை மயக்கம். பூண்டார் - அ னி ந் து கொண் டு வணங்கினார். . . . - பிறகு வரும் 18 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்த அப்பூதியடிகள் நாயனாரை அவருக்கு எதிரில் பணிந்து விட்டு வாகீசரர்கிய திருந்ாஷ்க்கரசு நாயனார்