பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பெரிய புராண விளக்கம் - 9

  • மனைவியா ருடன்மக்கள்

மற்றுமுள்ள சுற்றத்தார் அனைவரையும் கொண்டிறைஞ்சி

ஆராத காதலுடன் முனைவரைஉள் எழுந்த்ருளு

வித்தவர்தாள் முன்விளக்கும் புனைமலர்நீர் தங்கள்மேல்

தெளித்துள்ளும் பூரித்தார்.'

மனைவியாருடன் - அந்த அப்பூதியடிகள் நாயனார் த்ம்முடைய பத்தினியாரோடும். மக்கள் - புதல்வர்கள். மற்றும் - அவர்களையல்லாமல் வேறாகவும். உள் ள - இருக்கிற சுற்றத்தார் - உறவினர்கள். அனைவரையும் - எல்லோரையும். கொண்டு-அழைத்துக் கொண்டு சென்று. இறைஞ்சி - அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவடிகளில் விழுந்து அவரை வணங்கி. ஆராத - குறையாத, திருப்தியை அடையாத' எனலும் ஆம். காதலுட்ன் - விருப்பத்தோடு. முனைவரை - முதல்வராகிய திருநாவுக்கரசு நாயனாரை. உள் - தம்முடைய திருமாளி கையின் உட்புறத்திற்கு. எழுந்தருளுவித்து - எழுந்தருளு மாறு செய்து. அவர் - அந்தத் திருநாவுக்கரசு நாயனா குடைய, தாள் - திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். முன் - உண்பத்ற்கு முன்னால். விளக்கும் - கழுவும். புனை - அழகிய. மலர்நீர் - மலர்களோடு உள்ள துாய நீரை. மலர்: ஒருமை பன்மை மயக்கம். தங்கள் - தங்களுடைய, மேல் - தலைகளின் மேல். தெளித்து - தெளிவித்துக் கொண்டு. உள்ளும் - தங்களுக்கு உள்ளேயும். பூசித்தார் - குடித்து மகிழ்ச்சியினால் த ங் களு ைடய திருமேனிகளில் பூரிப்பை அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். ' ' . . -

அடுத்து வரும் 21 ஆம் 'கவியின் கருத்து வருமாறு :