பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 பெரிய புராண விளக்கம் - 9

பெயர். உய்ய உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். வந்தவரை - திருவாமூரில் திருவவதாரம் செய்தருளி வந்த திருநாவுக்கரசு நாயனாரை. த் சந்தி. தி ரு வ.மு து செய்விக்கும் - திருவமுது புரி ந் த ரு ள ச் செ ய் 4ம்: உண்ணுமாறு செய்யும். நேசம் - விருப்பம். உற-தம்மிடம் உண்டாக, விண்ணப்பம் செய - அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம் அப்பூதியடிகள் நாயனார் விண்ணப்பத்தைப் புவிய, செய: இடைக்குறை. அவரும் . அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும். அது - அவ்வாறு அப்பூதி யடிகள் நாயனாருடைய திருமாளிகையில் திருவமுது செய் தருளும் அதற்கு. தேர்ந்தார் - இணங்கி அருளினார்.

பின்பு வரும் 22 - ஆம் செய்யுளின் கருத்து வருமாது :

'தவத்தைப் புரிந்தவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த அப்பூதியடிக்ள் நாய னா ரு ைட ய திருமாளிகையில் திருவமுது புரிந்தருளுவதற்கு இணங்கிய சமயத்தில் அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய அழகிய பத்தினியாரைப் பார்த்து, இன்று நம்மிடம் அடைந்த பாக்கியம் இருந்த வண்ணம் என்ன வியப்பு?' என, "மையைப் போலக் கரிய நிறம் விளங்கும் திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமான் வழங்கிய திருவருளினால் இந்தப் பாக்கியம் நமக்கு வந்தது என்று எண்ணியே உஜ்ஜீவனத்தை அடைவோம்' என்று அந்த அப்பூதி படிகள் நாயனார் மகிழ்ச்சியை அடைந்து கொண்டு திருவமுதைச் சமைக்குமாறு தம்முடைப் பத்தினியாரிடம் கூறிச் சமைக்கத் தொடங்கினார். பாட்ல் வருமாறு :

" செய்தவர் இசைக்த போது

திருமனை யாரை கோக்கி "எய்திய பேறு கம்பால்

இருந்தவா றென்னே! என்று மைதிகழ் மிடற்றி னான்றன்

அருளினால் வந்த தென்றே