பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் தாயனார் புராணம் irs

உய்தும் என் றுவந்து கொண்டு

திருவமு தாக்கல் உற்றார்."

செய்தவர் . தவத்தைப் புரிந்தவராகிய அ ந் த த் திருநாவுக்கரசு நாயனார். இசைந்த - அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய திருமாளிகையில் திருவமுது புரிந்தருளு வதற்கு இணங்கிய போது - சமயத்தில், திரு - அழகிய, மனையாரை - தம்முடைய பத்தினியாரை. ே க் கி - பார்த்து. நம்பால் எய்திய - இன்று நம்மிடம் அடைந்த, பேறு - பாக்கியம். இருந்தவாறு இருந்த வண்ணம். என் . என்ன வியப்பு. ஏ : அசைநிலை. என்று - என. மை - மையைப் போலக் கரிய நிறம். திகழ் - விளங்கும். மிடற்றினான் தன் - திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமான், தன் : அசைநிலை. கரியநிறம் என்றாலும் இங்கே நீல நிறத்தையே கொள்க. நீலநிறத்தையும் கரிய திறம் என்பது மரபு: நீல நிறக் காக்கை' என்று வருவதைக் காண்க. அருளினால் - வழங்கிய திருவருளால், வந்தது - இந்தப் பாக்கியம் நமக்கு வந்தது. என்றது திருநாவுக்கரசு நாயனார் தங்களுடைய திருமாளிகையில் திருவமுது புரிந்தருள இணங்கியதை. என்றே - என்று எண்ணியே. உய்தும் - யாம் உஜ்ஜீவனத்தை அடைவோம். என்று - என. உவந்து கொண்டு - அந்த அப்பூதியடிகள் நாயனார் மகிழ்ச்சியை அடைந்து கொண்டு. திருவமுது - பிறகு அந்தத் திருநாவுக்கரசு ந ம ய ன ா ரு க் கா. க த் திருவமுதை சோற்றை. ஆக்கல் - சமைக்கச் செய்தலை. தம்முடைய பத்தினியாரைக் கொண்டு ச ைம க் க ச் செய்தார் என்றபடி. உ. ற் றார் . தொடங்கினார்.

பிறகு வரும் 23 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

பரிசுத்தமாக உள்ள நல்ல கறியமுதுகளான கைப்பு கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உப்பு என்னும் ஆது வகையாகிய சுவைகளோடு சமைக்கச் செய்து அமைந்த இனிய சுவையைப் பெற்ற திருவமுதையும் சமைக்கச் செய்து திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருஞ்