பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயன்ார் புராணம் 翼&岛

இருந்து வெண்ணிறு சாத்தி

இயல்புடை. இருவ ருக்கும்

பொருந்திய கீறு கல்கிப்

புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.'

இந்தப் பாடல் குளகம். அரும் - செய்வதற்கு அருமை யாக இருக்கும். தவர் . தவத்தைப் புரிந்த தவசியாராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். எழுந்து தாம் அமர்ந் திருந்த ஆசனப் பலகையிலிருந்து எழுந்து சென்று. செய்ய செந்தாமரை ம ல ள் க ைள ப் போலச் சிவந்துள்ள. அடியிணை - இரண்டு திருவடிகளையும். அடி : ஒருமை பன்மை மயக்கம். விளங்கி - தூய நீரால் கழுவிக்கொண்டு. வேறு - வேறாக உள்ள. ஒர் - ஒரு. திருந்தும் - திருத்த முடையதாக விளங்கும். ஆசனத்தில் ஆசனப் பலகையின் மேல். ஏறிப் பரிகலம் - ஏறிப் பரிகலமாகிய துணி வாழை இலையை, திருத்து-நீரால் துடைத்துச் சுத்தமாக்குவதற்கு. முன்னர் - முன்னால். இருந்து - அமர்ந்து. வெண்ணிறு - வெண்மையான விபூதியை. சாத்தி . தம்முடைய நெற்றி யிலும் திருமேனியில் உள்ள வேறு இடங்களிலும் அணிந்து கொண்டு. இயல்புடை - இறைவனை வணங்கும் இயல்பைப் பெற்ற. இருவருக்கும் - திருநாவுக்கரசினுடைய அன்னை யார், தகப்பனார் ஆகிய இரண்டு .ே பர் க ளு க் கு ம். பொருந்திய பொருத்தமாக உள்ள, நீறு . விபூதிகை" ந ல் கி - வழங்கியருளி. ப் : ச ந் தி. பு த ல் வர் க் கு ம் - திருநாவுக்கரசு அல்லாத மற்ற குமாரர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அளிக்கும் விபூதியை வழங்கியருளும். போழ்தில்- சமயத்தில். - -

பிறகு வரும் 32 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

ஆதி காலத்தில் தோன்றிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற தான்கு வேதங்களாகிய ச ர த் தி ர ங் கன் கறும் உ, ண் ைை களைத் தெரிந்து கொண்ட வேதியராகிய அப்பூதி படிகள் நாயனாரைப் பார்த்துத் திருநாவுக்கரசு நாயனார்,