பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் of 95

புரிந்து விட்டான்,' என எண்ணி தங்களுடைய திருவுள்ளங்களில் வருத்தத்தை அ ைட ந் தார்கள்." பாடல் வருமாறு : - - -

பிரிவுறும் ஆவி பெற்ற

பிள்ளையைக் காண்பார் தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்க்தார் :

கின்ற அப் பயந்தார் தாங்கள் அறிவரும் பெருமை அன்பர்

அமுதுசெய் தருளு தற்குச் சிறிதிடை யூறு செய்தான்

இவன் என்று சிங்தை நொந்தார்.' பிரிவு உறும் - உடம்பிலிருந்து பிரிவை அடைந்தி ருக்கும். ஆவி - தன்னுடைய உயிரை. பெற்ற - மீண்டும் பெற்ற. பிள்ளையை - அப்பூதியடிகள் நாயனாருடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசை. க்: சந்தி. காண்பார் - பார்த்த அவனுடைய அம்மையாரும் தக்ப்ப னாரும். பார்த்த மக்கள்' எனலும் ஆம்: ஒருமை பன்மை மயக்கம். தொண்டின் நெறியினை - சிவபெருமானுக்கு உரிய திருத்தொண்டின் வழியை. ப் சந்தி. போற்றி - பாதுகாத்துப் புரிந்து கொண்டு. வாழ்ந்தார் - வாழ்ந்து வந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். நின்ற - அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த, அப்பயந்தார் - மூத்த திருநாவுக்கரசைப் பெற்றவர்களாகிய அந்த அப்பூதியடிகள் நாயனாரும், அவருடைய தர்ம பத்தினியாரும்; ஒருமை பன்மை மயக்கம். தாங்கள் என்றது அந்த இருவரையும். அறிவரும் . தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும். பெருமை - பெருமையைப் பெற்ற. அன்பர் - திருவதிகை விரட்டானேசுவரருடைய பக்தராகிய திருநாவுக்கரசு நாயனார். அமுது செய்தருளுதற்கு - திருவமுது செப் தருளுவதற்கு. ச்: சந்தி. சிறிது - சிறிது நேரம். இடையூறு. தாமதம் ஆதலாகிய துன்பத்தை. செய்தான் இவன் - இந்த மூத்த திருநாவுக்கரசு புரிந்து விட்டான். என்று .