பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரிய புராண விளக்கம் . 9

என அவர்கள் எண்ணி. சிந்தை - தங்களுடைய திருவுள்ளங் களில்; ஒருமை பன்மை மயக்கம். .ெ நா ந் தா ர் - வருத்தத்தை அடைந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். பிறகு உள்ள 38 - கவியின் உள்ளுறை வருமாறு : அவ்வாறு அந்த அப்பூதியடிகள் நா யனா ரு ம் அவருடைய தர்ம பத்தினியாரும் அடைந்த வாட்டத்தைத் தெரிந்து கொண்டு வார்த்தைகளுக்கு அ ர ச ரா கி ய திருநாவுக்கரசு நாயனாரோடு கூட அந்த இருவரும் தாங்கள் வாழும் உயரமாக ஓங்கி நிற்கும் தம்முடைய திருமாளிகையை அடைந்து அந்தத் தி ரு நா வு க் க ர சு நாயனார் திருவமுது செய்தருள்வதற்கு அமைந்த பக்குவத் தோடு இருக்க, மூன்று புரிகளைக் கொண்ட பூணுரல் புரண்டு பழகும் அழகிய மார்பைப் பெற்ற வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாரும் தம்முடைய திருவுள்ளத்தில் சுமந்து கொண்டிருந்த ஆனந்தத்தோடும் திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்வதற்குத் தக்கவையாகிய திருவமுதையும், பல கறியமுதுகளையும், பாயசத்தையும், ஆசனப் பலகையையும், கைகளைக் கழுவத் தண்ணிர் திரம்பிய செம்பையும், கால்களைக் க ழு வு வ த ற் கு த் தண்ணிரை நிரப்பிய குடத்தையும், வாயைத் துடைத்துக் கொள்வதற்குச் சிறிய துண்டையும், திருவமுது செய்த பிறகு கைகளைக் கழுவிக் கொள்ள நீரை நிரப்பியுள்ள செம்பையும், திருவமுது செய்த பிறகு அமர்வதற்கு வேறோர் ஆசனப் பலகையையும், தரித்துக் கொள்வதற்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, ஜாதிக் காய், ஜாதி முந்திசி முதலியவற்றையும் அமைத்து வைத்து விட்டுத் திருநாவுக்கரசு நாயனாரிடம் அடைபவரானார்." பாடல் வருமாறு :

ஆங்கவர் வாட்டம் தன்னை

அறிக் துசொல் அரசர் கூட ஓங்கிய மனையில் எய்தி

அமுதுசெய் தருள உற்ற