பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 to பெரிய புராண விளக்கம். 9

தண்ணிரை நிரப்பிய குடத்தையும், வாயைத் துடைத்துக் கொள்வதற்குச் சிறிய துண்டையும், உடுத்துக் கொள்ளப் புதிய ஆ ைட ைய யு ம், அங்க வஸ்திரத்தையும், திருவமுது செய்த பிறகு கைகளைக் கழுவிக் கொள்ள நீரை நிரப்பியுள்ள செம்பையும், திருவமுது செய்த பிறகு அமர்வதற்கு வேறோர் ஆசனப் பலகையையும், பூசிக் கோள்வதற்கு அரைத்த சந்தனத்தையும், இட்டுக் கொள்ள விபூதியையும், தரித்துக் .ெ கா ள் வத ற் கு வெற்றிலை, பாக்கு, வாசனைச் சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், சத்தைக் காம்பு முதலிய வற்றையும். சமைத்து - அமைத்து வைத்து விட்டு. க் : சந்தி, சார் வார் - திருநாவுக்கரசு ந | ய ன ா ைர த் திருவமுது செய்தருளுவதற்காக அழைக்கும் பொருட்டு அந்த இடத்தை அந்த அப்பூதியடிகள் நாயனார் அடைவாரானார். -

பிறகு உள்ள 39 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

சான்றோர்கள் புகழ்ந்து கூறிய கோமயமாகிய சாணத்தைக் கரைத்த புனலால் தரையை விளங்குமாறு துடைத்து விளங்கிய வெண்மையாக உள்ள சுண்ணச் சாந்தையும் வைத்துச் சிறப்பைப் பெற்ற திருவிளக்கை ஏற்றி வைத்து, தம்முடைய திருமாளிகையின் பின்புறத் தோட்டத்தில் வளர்ந்து நிற்கும் அந்த வாழைமரத்தில் நீளமாக உள்ள குருத்திலையை வைத்துத் தண்ணீரினால் மகிழ்ச்சியை அடைந்து உடனே துடைத்துச் சுத்தம் செய்து அறுத்த வாழை இலையின் பக்கத்தை வலப்பக்கத்தில் இருக்குமாறு முறைப்படி வைத்தார் அந்த அப்பூதியடிகள் நாயனார். பாடல் வருமாறு :

  • புகழ்ந்தகோ மயத்து ரோல்

பூமியைப் பொலிய விேத் திகழ்க்தவான் சுதையும் போக்கிச்

சிறப்புடைத் தீபம் ஏற்றி