பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,艺供 பெரிய புராண விளக்கம் - 9

அடியவர்களுடைய திருவுள்ளங்களில் உள்ள குறிப்பை, உணர்ந்து - தெரிந்து கொண்டு. செய்வாராய் . அந்தப் பணிவிடைகளைப் புரிபவராகி. முதிரும் . முதிர்ச்சியை அடைந்து விளங்கும். அறிவின் - தம்முடைய அறிவினால் உண்டாகும். பயன் - பிரயோசனத்தை. கொள்வார் - அடைபவர் அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார்:

தோன்றா எழுவாய். - -

பிறகு உள்ள 8 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : சிவபெருமானுடைய திருத்தொண்டர்கள் பல பேர் களும் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி வந்து சேர்ந்து உண்ண உண்ணக் குறையாத திருவமுதை அந்தத் திருத்தொண்டர்கள் உண்ணுமாறு புரிந்து கொண்டு தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகக் குறைபாட்டை அடைந்து தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்பவர்களாகிய அந்தத் திருத்தொண்டர்களுக்குப் பெரிய செல்வத்தை மொண்டு மொண்டு வழங்கி வண்டுகள் வந்து மொய்க்கும் கூந்தலைப் பெற்ற உமாதேவியாருடைய கணவனாகிய சிவபிரானுடைய சிவந்த திருவடிகள் என்று கூறப்பெறும் செந்தாமரை மலர்களைத் தம்முடைய இருதய புண்டரீகத்தில் வைத்து வாழ்த்தி அந்தத் தொண்டர்களை வணங்கும் சிறந்த பண்பைப் பெற்றவர் அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார். பாடல் வருமாறு . . . . . .

தொண்டர் பலரும் வந்தீண்டி

உண்ணத் தொலையா அமுதுட்டிக் கொண்டு செல்ல இருநிதியம் - முகந்து கொடுத்துக் குறைந்தடைவார் வண்டு மருவும் குழலுமையாள்

கேள்வன் செய்ய தாளென்னும் புண்ட ரீகம் அகமலரில் -

வைத்துப் போற்றும் பொற்பினார்.'