பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் 2 r.

தொண்டர் - சிவபெருமானுடைய திருத்தொண் டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பலரும். பல்பேர்களும், வந்து தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி வந்து. ஈண்டி - சேர்ந்து உண்ண - உண்ண. த் சந்தி. தொலுை யா - சிறிதேனும் குறையாத அமுது - திரு அமுதை: சோற்றை ஊட்டிக்கொண்டு. அந்தத்திருத்தொண்டர்கள். உண்ணுமாறு புரிந்துகொண்டு. செல்ல - தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக, குறைந்து . செல்வத்தில் குறைபாட்டை அடைந்து, அடைவார் - தம்முடைய திருமாளிகைக்கு வந்து சேர்பவர்களாகிய அந்தத் திருத்தொண்டர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். இரு - பெரிய. நிதியம் - செல்வத்தை. மு.கந்து - மொண்டு மொண்டு. கொடுத்து . வழங்கி, வண்டு . வண்டுகன்; ஒருமை பன்மை மயக்கம். மருவும் - பறந்து வந்து மொய்க்கும். குழல் - கூந்தலைப் பெற்ற. உமையாள். உமா தேவியினுடைய. கேள்வன். கணவனாகிய சிவபெருமா னுடைய செய்ய - சிவந்த தாள் . திருவடிகள்: ஒருமை பன்மை மயக்கம். என்னும் . என்று கூறப்பெறும். புண்ட ரீகம் . செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை மயக்கம், அகமலரில் - தம்முடைய இருதய புண்டரீகத்தில் வைத்துப் போற்றும் . வைத்துக்கொண்டு வாழ்த்தி அந்தத் திருத் தொண்டர்களை வணங்கும். பொற்பினார் . சிறந்த பண்பைப் பெற்றவர் அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார்: தோன்றா எழுவாய். * . - - பிறகு வரும் 4 -ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் இந்தப் பான்மையைப் பெற்றவராகி தம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்லும் காலத்தில் ஒரு வரம்பு இல்லாத திருத்தொண்டுகளினுடைய உண்மையாகிய பான்மையை இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் தெரிந்துகொள்ளுமாறு விதிமுறையோடு திருத்தொண்டர் களைப் பணிந்து உண்மையான சிவனடியவர்களுடைய திரு

பெ. புரா - 9 - 2 -