பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛夏密 பெரிய புராண விளக்கம் - 9

களாவன : காமிசாகமம், சாரியாகமம், காரணாகமம், மிருசேந்திர ஆகமம், தத்புருஷ ஆகமம் முதலியவை. விதி - விதித்த விதிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். வழி - வழியில். வேத காரணரை - வேதங்களைப் படைத்த காரணராகிய அயவந்தீசுவரருடைய, நித்தல் - ஒவ்வொரு நாளும். பூசனை - மலர்களால் பூசனையை. புரிந்து அந்தத் தி ரு நீ ல ந க் க நாயனார் செய்து. எழு . எழுத்து அமைந்த, எழுந்து - துயிலிலிருந்து எழுந்து. நியமமும் - நியமகிகளையும்; ஒருமை பன்மை மயக்கம் அவையாவன : நீராடுதல், உடையை உடுத்தல், சந்தியா வந்தனம் புரிதல், ஆசனத்தில் அமர்தல், பூசை புரிதல் முதலியவை. செப்தே - புரிந்து கொண்டே. அத்தர் . தத்தையாரைப் போன்றவராகிய அந்த அயவந்தீசுவர குடைய. அன்பருக்கு - பக்தர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். அமுது செய்விப்பது - திருவமுது செய்யுமாறு செப்விப்பது. முதலா - முதலாக உள்ள. எத்திறத்தன . எந்த வகையான. பணிகளும் - திருப்பணிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். ஏற்று - அந்த அடியவர்களை வர்வேற்று. எதிர் - அந்த அடியவர்களுக்கு எதி ல்: செய்வார் . புரிவார்.

- அடுத்து வரும் 7 - ஆம் கவியின் கருத்து வருமாறு : அத்தகையவை ஆகிய செய்கைகளைச் செய்து வருவ தோடு அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய திருமாளி கையில் தங்கியிருக்கும் காலத்தில் திருவாதிரை நட்சத் திரத்தில் மேவிய பூசையாகிய அயவந்தீசுவரருக்கு வரை கறையான செயலைச் செய்ய வேண்டிய விதியோடு செய்து நிறைவேற்றிவிட்டுப் பரிசுத்தமான திருத்தொண்டராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் பழங்கால முதல் நெடுங் காலமாக விளங்கும் அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த நாயனாராகிய அயவந்தீசுவரருக்கும் அருச்சனையைச் செய்ய அந்த நாயனார் விரும்பினார்." ஆாடல் வருமாறு : . x , . . . ." * *- ५५