பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,$2莎 பெரிய புராண விளக்கம் . 8

வேண்டிய பொருட்களைச் சிறிதும் குறைபாடு இல்லாமல் எடுத்துக் கொண்டு தம்முடைய தர்மபத்தினியாரோடும் கூட இறைவராகிய அயவந்தீசுவரர் எழுந்தருளியிருக்கும் அயவந்தி என்னும் திருக்கோயிலுக்கு வந்து அடைந்தார்." பாடல் வருமாறு : - -

உறையு ளாகிய மனைகின்றும்

ஒருமை அன்புற்ற முறைமை யால்வரு பூசைக்கும்

முற்றவேண் டுவன - குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொ டும்கூட * > இறைவர் கோயில்வக் தெய்தினர் . Ꮽw எல்லையில் தவத்தோர்.' r > இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோன் sஅமைந்துள்ளது. எல்லை - ஒரு வரம்பு. இல் - இல்லாத: கடைக்குறை. தவத்தோர். தவத்தைப் புரிந்த தவசியா ராகிய அந்தத் திருநீலதக்க நாயனார். உறையுள் ஆகிய - தாம் தங்கும் இடமாகிய, மனை நின்றும் - தம்முடைய திருமாளிகையிலிருந்தும். ஒருமை - ஒருமைப் பாட்டைப் பெற்ற. அன்பு - பக்தியை. உற்ற - அடைந்த முறை மையால் - முறையோடு; உருபு மயக்கம். வரு . பரம்பரை பரம்பரையாக நடந்து வரும். பூசைக்கும் - அயவந்தீசுவரர் புரியும் பூசைக்கும். முற்ற - முழுவதும். வேண்டுவன - வேண்டிய பொருட்களை. அவையாவன: ஆசனப் பலகை, அட்சதை, அரைத்த மஞ்சள், அறுகம்புல், அருச்சனைக்கு உரிய பலவகை மலர்கள், துர்பக்கால், சாம்பிராணி, மட்டிப்பால், ஊதுவத்தி, கற்பூரத் தட்டு, ஹாரத்தி எடுக்கும் தாம்பாளம், ஹாரத்தி, ஹாரத்தியைக் கரைக்கும் மஞ்சளும் சுண்ணாம்பும் முதலியவை. குறைவு அற - ஒரு குறைபாடும் இல்லாமல். க்:சந்தி. கொண்டு - எடுத்துக் கொண்டு. மனைவியார் தம்மொடும் . தம்முடைய தர்ம பத்தினியாரோடும். தம் : அசைநிலை.