பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 227

நீடு . அந்தத் திருநீலநக்க நாயனார் நெடு நேரமாகப் புரிந்த, திருநீல நக்க நாயனார் : தோன்றா எழுவாய். பூசனை - அயவந்தி ஈசுவரருக்குப் புரிந்தருளிய பூசை. திரம்பியும்-நிறைவேறிவிட்டாலும். அன்பினால்-பக்தியில்; உருபு மயக்கம். நிரம்பார் - தம்முடைய திருவுள்ளத்தில் திறைவு பெறாதவராகி; முற்றெச்சம். மாடு - பக்கத்தில். சூழ்-சுற்றியுள்ள. புடை-ஆலயத்தினுடைய பிராகாரத்தில். வலம் கொண்டு . வலமாக வந்து. வணங்கி - மீண்டும் திருக்கோயிலுக்குள் நுழைந்து அந்த அயவந்தி ஈசுவரரைப் பணிந்து, முன் - அந்த ஈசுவரருடைய சந்நிதியில், வழுத்தி - அந்த சசுவரரைத் துதித்து. த் : சந்தி. தேடு - திருமாலும் பிரம தேவனும் தேடும். மா - பெருமையைப் பெற்று விளங்கும். மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி. பொருளினை - அர்த்தமாக விளங்கும் அந்த சசுவரரை. த் சந்தி. தெளிவுஉற - தம் மு ைட ய திருவுள்ளத்தில் தெளிவு உண்டாகுமாறு. நோக்கி - அந்த ஈசுவரரைத் தரிசித்து. நாடும் - தாம் என்றும் விரும்பும். அஞ்சு எழுத்து - ந, ம,சி,வாய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து : ஒருமை பன்மை மயக்கம். உணர்வு உற உணர்ச்சி உண்டாகுமாறு. இருந்து முன் . அந்த ஈசுவரருடைய சந்திதியில் அமர்ந்து கொண்டு. நவின்றார் - ஒதினார். - -

பிறகு வரும் 11 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

தொலைதல் இல்லாததும் தாம் புரிந்ததும் ஆகிய தவத்தின் பயனைப் பெற்ற திருத் தொண்டராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள் முதலாக விளங்கும் சான்திரங்கள் கூறிய, மெய்யாகத் திகழும் ந, ம,சி,வா,ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும் உருப்போட்டு