பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛器蕊 பெரிய புராண விளக்கம். 9

எண்ணுகின்ற சமயத்தில் தம்முடைய நிலையிலிருந்து அந்த அயவந்தி சசுவரருடைய சந்நிதியில் தவறுமாறு உயரமாக உள்ள தங்கமலையாகிய மேருமலையை வில்லாக ஏந்திய வராகிய அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின்மேல் ஒரு சிலந்திப் பூச்சி விழுந்து விட்டது. பாடல் வருமாறு :

தொலைவில் செய்தவத் தொண்டனார்

சுருதியே முதலாம் -

கலையின் உண்மையாம் எழுத்தஞ்சும் கணிக்கின்ற காலை . . . . . . .

கிலையில் கின்றுமுன் வழுவிட

இண்டபொன் மேருச்

சிலையி னார்திரு மேனிமேல் விழுந்ததோர் சிலம்பி.'

தொலைவு - தம் மி டமி ரு ந் து அகலுதல். இல். இல்லாத கடைக்குறை. செய் - தாம் புரியும். தவ. தவத்தின் பயனை ஆகுபெயர். த் : சந்தி. தொண்டனார். பெற்ற திருத்தொண்டராகிய அந்தத் திரு நீ ல ந க் க நாயனார். சுருதி - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம் வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஏ : அசை நிலை. முதலாம் - முதலாக விளங்கும். கலையின் - சாத்திரங்கள் கூறிய; ஒருமை பன்மை மயக்கம். உண்மையாம் - மெய்யாகத் திகழும். எழுத்து அஞ்சும் - ந, ம, சி வா ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். கணிக்கின்ற. அந்த தாயனார் உருப்போட்டு எண்ணுகின்ற. காலை . சமயத்தில், நிலையில் நின்று - அவ்வாறு உருப்போடுகின்ற திலையிலிருந்து. முன் - அந்த அயவந்தி ஈசுவரருடைய சந்நிதியில். வழுவிட - தவறுமாறு. நீண்ட - உயரமாக உள்ள பொன் . தங்க மலையாகிய; ஆகு பெயர். மேரு. மேரு மலையை ச் : சந்தி. சிலையினார் . வில்லாக ஏத்தியவராகிய அயவத்தி சசுவரருடைய. திருமேனி மேல்.