பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - பெரிய புராண விளக்கம் - 9.

தோன்றிய. அச்சமோடு- பயத்தோடு. இளம் - இளமைப் பருவத்தை உடைய. குழவியில் தம்முடைய குழ்ந்தையின் மேல் உருபு மயக்கம். விழும் சிலம்பி - விழும் சிலந்திப் பூச்சி. ஒழிந்து - அந்த இடத்திலிருந்து விட்டு. நீங்கிட - போகுமாறு. ஊதி - தம்முடைய வாயினால் ஊதி. முன் . முன்னால், துமிப்பவர் போல - எச்சிலை உமிழ்பவரைப் போல. - ப் : சந்தி. பொழிந்த மழையைப் போல்ச் சொரிந்த அன்பினால் - பக்தியோடு: உருபு மயக்கம் மேல் ஊதி - தம்முடைய வாயினால் அந்த அயவந்தி சசுவரருடைய திருமேனியின் மேல் ஊதி. போக . அந்தச் சிலந்திப் பூச்சி போகுமாறு. துமிந்தனர் - எச்சிலை உமிழ்ந்தனர்.

அடுத்து உள்ள 18 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்தத் திருநீலநக்க நாயனாருடைய தர்மபத்தினி யார் பதைபதைத்துப் போய் அந்த அயவந்தி ஈசுவரருக்கு மேல் விழுந்த சிலந்திப் பூச்சியைத் தம்முடைய வாயினால் ஊதி எச்சிலை உமிழ்ந்த அந்தச் செயலினால் முன் பிறவியில் புரிந்த அந்தப் பாச பந்தத்தைச் சிதையு மாறு செய்யும் பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தைப் புரிந்த தவசியாராகிய அந்த அழகிய வேதியராகிய திருநீல நக்க நாயனார் பார்த்து விட்டுத் தம்முடைய கண்களைத் தம்முடைய கைகளால் மூடிக்கொண்டு, அறிவு இல்லாத வளே, இந்தத் தகாத செயலை நீ புரிந்தது என்ன பைத்தியக்காரத்தனம்' என்று அந்தத் திருநீலநக்க நாய னார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அவருடைய தர்ம பத்தினியார், சுண்ணாம்பைப் போல வெண்மையாக் உள்ள அந்தச் சிலந்திப் பூச்சி அயவந்தி ஈசுவரருடைய திரு மேனியின்மேல் விழவே, அந்தப் பூச்சியை அடியேனுடைய வாயினால் ஊதி எச்சிலை உமிழ்ந்தேன்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு :