பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 231

பதைத்த செய்கையால் மனைவியார் முற்செயப் பந்தம் - சிதைக்கும் மாதவத் திருமறை

யவர்கண்டு தம்கண் - புதைத்து, மற்றிது செய்ததென் பொறியிலாய்!” என்னச் கதைச்சி லம்பிமேல் விழஊதித் துமிந்தனன் என்றார்.

பதைத்த அந்தத் திருநீல நக்கனாருடைய தர்ம பத்தினியார் பதைபதைத்துப் போய் அந்த அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின் மேல் விழுந்த சிலந்திப் பூச்சியைத் தம்முடைய வாயினால் ஊதி எச்சிலை உமிழ்ந்த செய்கையால் . அந்தச் செயலினால். மனை வியார் . அந்தத் திருநீல நக்க நாயனாருடைய தர்மபத்தினி யார். முன் - முன் பிறவியில். செய் . புரிந்திருக்கும். அப்பந்தம் - அந்தப் பாச பந்தத்தை. சிதைக்கும். சிதையு மாறு செய்யும். மா - பெருமையைப் பெற்று விளங்கும். தவ - தவத்தைப் புரிந்த தவசியாராகிய, த் சந்தி. இரு .அழகிய. மறையவர் அந்த வேதியராகிய திருநீல நக்க நாயனார். கண்டு - பார்த்துவிட்டு, தம்முடைய பத்தினியார் அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின் மேல் தம்முடைய வாயிலிருந்து ஊதி எச்சிலை உமிழ்ந்ததைப் பார்த்து விட்டு. தம் - தம்முடைய. கண் - இரண்டு கண் களையும்; ஒருமை பன்மை மயக்கம். புதைத்து - தம்முடைய கைகளால் முடிக் கொண்டு. மற்று. அசை நிலை. இது - இந்தத் தகாத செயல்ை. பொறியிலாய் - அறிவு இல்லாதவளே. இலாய் : இடைக்குறை செய்ததுநீ புரிந்தது. என் - என்ன பைத்தியக்காரத்தனம். என்ன . என்று அந்தத் திருநீலநக்க நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. ச் : சந்தி. சுதை - அவருடைய தர்மபத்தினியார் சுண்ணாம்பைப் போல வெண்மையாக உள்ள உவம ஆகுபெயர். ச் : சந்தி. சிலம்பி - அந்தச்