பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 23.3

பூசனைத் திறத்தில் - அயவந்தி ஈசுவரருக்குப் புரியும் பூசையினுடைய தி றத் தி ல். இ ைன வ - இத்தகைய, செய்கை - அடியேனுடைய மனைவி செய்த செயல். இங்கு - இந்த இடத்தில். அது.சிதம்.ஆம் - உசிதமற்ற த கு ம்.. எ ன - எ ன் று. எ ன் னு ம் . த ம் மு ை- ய் திருவுள்ளத்தில் நினைக்கும். நினைவினால் - எண்ணத் தினால். அவர் தம்மை . தம்முடைய அந்தத் தர்ம் பத்தினியாரை, தம் : அசை நிலை. விட்டு - விட்டுவிட்டு. அகன்றிட். அகன்று போய்விட, நீப்பார் - துறந்து விடுபவரானார். - - - - . . . ; அடுத்து உள்ள 15-ஆம் கவியின் கருத்து வருமாறு :

மின்னலைப் போல ஒளி வீசும் நீளமாக இருக்கும். சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற: ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இல்லாதவராகிய அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின் மேல் விழுந்த நூலைத் தன்னுடைய வாயிலிருந்து வெளி. யிடும் அந்தச் சிலந்திப் பூச்சியை வேறாகிய ஒரு முறை. யினால் போக்குவதை விட்டு விட்டு முன்னால் ஓடி வந்து ஊதி உன்னுடைய வாயில் உள்ள எச்சில் தீர். அந்த அயவந்தி ஈசுவரருக்கு மேல் விழுமாறு ஓர் அடாத காரியத்தை நீ செய்தாய்; ஆதலால் உன்னை நான் இனி மேல் இந்தத் திருமாளிகையிலிருத்து துறந்து விட்டேன்' என்று அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய தர்ம பத்தினியாரிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்." பாடல் வருமாறு : - -

மின்கெ டுஞ்சடை விமலர்மேல்

விழுக்த நூற்சிலம்பி தன்னை வேறொரு பரிசினால்

தவிர்ப்பது தவிர . முன்அணைக் துவக் துரதிவாய் நீர்ப்பட முயன்றாய்;