பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zsa - பெரிய புராண விளக்கம் 9

உன்னை கான்இணித் துறந்தனன்

ஈங் கென உரைத்தார்.' .

மின் மின்னலைப் போல ஒளியை வீசும் உவம ஆகு பெயர். நெடும். நீளமாக விளங்கும். சடை - சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற, விமலர் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இயல்பாகவே இல்லாதவராகிய அயவந்தி ஈசுவரருடைய மேல் - திருமேனியின் மேல். விழுந்த நூல் - விழுந்த நூலைத் தன்னுடைய வாயிலிருந்து வெளியிடும். சிலம்பி தன்னை - அந்தச் சிலந்திப் பூச்சியை. தன் : அசை நிலை. வேறு ஒரு . வேறாகிய ஒரு. பரிசினால் - முறையினால். தவிர்ப்பது . போக்குவதை. தவிர - விட்டு விட்டு: எச்சத் திரிபு. முன் - முன்னால். அணைந்து - ஒடி வந்து. ஊதி வாய் நீர்ப்பட. ஊதி உன்னுடைய வாயில் உள்ள எச்சில் நீர் அந்த அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின் மேல், விழுமாறு. முயன்றாய் - ஓர் அடாத காரியத்தை நீ செய்தாய். உன்னை - நின்னை, நான் . யான். இனி . இனிமேல். த் : சந்தி. ஈங்கு - இந்தத் திருமாளிகை பிலிருந்து. துறந்தனன் - துறந்து விட்டேன். எண் - என்று: இடைக்குறை. உரைத்தார் . அந்தத் திருநீல நக்க நாயனார் தம்முடைய தர்மபத்தினியாரிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். . . . .

அடுத்து உள்ள 16 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய தர்மபத்தினியாரிடம், ! உன்னை யான் துறந்து விட்டேன்" என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்தச் சமயத்தில் சூரியன் அத்தமன மலையின் மேல் சென்று மறைந்து விட்டான்; தமக்குத் தம்முடைய கணவனாராகிய திருநீல நக்க நாயனார் இட்ட கட்டளையின்படி அவருடைய தர்ம பத்தினியார் ஒரு வழியில் அவரை விட்டுவிட்டு அகன்று செல்ல முழுவதும் வேண்டிய பண்டங்களைச் சிறிதேனும்