பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பெரிய புராண விளக்கம். 9

தேன், விபூதி, அரைத்த சந்தனம் முதலியவை, ஹாரத்தியைக் கரைக்க அரைத்த மஞ்சள், சுண்ணாம்பு முதலியவை. பழுது - சிறிதேனும் குற்றம் இல்லாமல். தீர் - தீர்ந்த பூ ச ைன - அ ய வ ந் தி சசுவரருடைய பூசையை. முடித்து அந்த நாயனார் செய்து நிறை வேற்றிவிட்டு. க் ச ந் தி. க ற் ைற - கத்தையாகிய, வேணியார் . சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் .ெ ப ற் ற வ ரா கி ய அயவந்தி ஈசுவரருடைய. தொண்டரும் - திருத்தொண்டராகிய அந்தத் திருநீலநக்க நாயனாரும். கடி - பாதுகாப்பைப் பெற்ற மனை - தம்முடைய திருமாளிகைக்குள். புகுந்தார் - துழைந்தார்.

பிறகு வரும் 17 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

பயத்தை அ ைட ந் தி ரு க் கு ம் திருவுள்ளத்தோடு தம்முடைய க ன வ ரா கி ய அ ந் த த் திருநீல நக்க நாயனாருடைய பக்கத்தில் அடையுமாறு போக முடியாத வராகி ஆலகால விடத்தை விழுங்கியவராகிய அயவந்தி ஈசுவரர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்குச் சென்று திருநீலநக்க நாயனாருடைய தர்மபத்தினியாராகிய அந்த நங்கையார் அந்தக் கோயிலில் தங்கிக் கொண்டிருந்தார்; செம்மையான சொற்கள் அடங்கிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் அன்று இரவில் பஞ்சைப் புகுத்திச் செய்த மென்மையான மெத்தையாகிய படுக்கையில் படுத்துக் கொண்டு உறங்கு பவர் ஆனார். பாடல் வருமாறு : - - -- *

அஞ்சும் உள்ளமோ டவர்மருங்

கணைவுற மாட்டார் கஞ்சம் உண்டவர் கோயிலில்

கங்கையார் இருக்தார்,