பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் - 237,

செஞ்சொல் நான்மறைத் திருலே

கக்கர்தாம் இரவு பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற் பள்ளிகொள் கின்றார்."

அஞ்சும் - பயத்தை அடைந்திருக்கும். உள்ளமோடு - திருவுள்ளத்தோடு, அவர் - தம்முடைய கணவராகிய அந்தத் திருநீலநக்க நாயனாருடைய, மருங்கு - பக்கத்தில். அணைவுற அடையுமாறு போக. மாட்டார் - முடியாத வராகி; முற் றெ ச் சம். ந ஞ் சம் - திருமால் பள்ளி. கொண்டருளிய பாற்கடலில்தோன்றிய ஆலகாலவிடத்தை. உண்டவர் - விழுங்கியவராகிய அயவந்தி ஈசுவரர். கோயிலில் . எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்குச் சென்று. கோயிலில்: உருபு மயக்கம், நங்கையார் . திரு நீலநக்க நாயனாருடைய தர்மபத்தினியாராகிய அந்த நங்கையார். இருந்தார் . தங்கிக் கொண்டிருந்தார். செம் - செம்மையான சிறப்பைப் பெற்றவையான. சொல் - சொற்கள் அடங்கிய ஒருமை பன்மை மயக்கம். நான்மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவராகிய, மறை : ஒருமை பன்மை மயக்கம். த் : சந்தி. திருநீல நக்கர் தாம் - திருநீலநக்க நாயனார். தாம் : அசை நிலை. இரவு - அன்று இரவில். பஞ்சின் - இலவம் பஞ்சைப் புகுத்திச் செய்த மெல் அணை - மென்மையான மெத்தை, யாகிய, ப் : சந்தி, பள்ளியில் - படுக்கையில். பள்ளி கொள்கின்றார் . அந்த நாயனார் படுத்துக் கொண்டு உறங்குபவரானார். - . . . . "

பிறகு வரும் 18 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'அவ்வாறு அந்தத் திருநீலதக்க நாயனார் படுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சாத் த ம ங் ைக பி ல், விளங்கும் அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி,