பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் . 23.

கெளவாணப் பண்ணில் அமைந்த திருத்தொண்டத்தொகை என்னும் தி ரு ப் ப தி.க த் ைத. பாடிய - பாடியருளிய, நம்பியை ஆளுடைய ந ம் பி யா கி ய சுந்தரமூர்த்தி, நாயனாரை, ப் : சந்தி, பணிந்து...பெருமிழலைக்குறும்ப நாயனார் வணங்கிவிட்டு. நித்தன் - என்றும் நிலைத்து நிற்பவனாகிய கி ரு பாபு ரீசன். அருள் . வழங்கிய திருவருளை. பெற்றவர். பெற்றவராகிய அந்தச் சுந்தர மூர்த்தி நாயனாருடைய. பாதம் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். நினைக்கும் - தியானம் செய்யும். நியம - நியமத்தில். த் : சந்தி, தல்ை நின்றார் . தலை சிறந்து நின்றவர். . .

பிறகு வரும் 5 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : மையை நிரம்பத் தடவிக்கொண்ட விசாலமாகிய கண்களைப் பெற்ற பரவை நாச்சியாருடைய கணவனாகிய சுந்தரமூர்த்தி நாயனாருடைய செந்தாமரை மலர்களைப் போல இருப்பவையும், வீரக் கழல்களை அணிந்தவை களுமாகிய திருவடிகளைத் தம்முடைய கைகளால் கும்பிட்டு வணங்கித் தம்முடைய திருவாயினால் வாழ்த்துக் களைக் கூறித் தம்முடைய திருவுள்ளத்தினால் தியானம் புரியும் கடமையில் சிவந்த திருமேனியைப் பெற்றவளாகிய திருமகளினுடைய கணவனாகிய திருமாலும் நான்கு முகங்களைப் பெற்றவனாகிய பிரமதேவனும் பன்றி உருவத்தை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும் அன்னப் பறவையினுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்து பார்த்தும் திருவடிகளையும், திருமுடியையும் தெரிந்து கொள்ளாத சிவந்த தங்கத்தைப் போன்ற இரண்டு திருவடிகளின் கீழே உஜ்ஜீவனத்தை அடையும் பொருட்டு அந்தத் திருவடிகளைச் சேர்வதற்கு உரியதாக அமைந்த வழி இதுதான் என எண்ணி பக்தியோடு தம்முடைய வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டு வந்தார் அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார். பாடல் வருமாறு : - " * - -