பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருநீலநக்க நாயனார் புராணம் 241.

'களை வணங்கித் தரையில் விழுந்து பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அந்த சசுவரருடைய சந்நிதியில் அந்த சசுவரரைத் துதித்துத் தம்முடைய தர்மபத்தினி யாராகிய அழகு மருவிய பெண்மணியாரையும் அழைத்துக் கொண்டு தம்முடைய திருமாளிகைக்கு மறுபடியும் திரும்பி வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு :

போது போய் இருள் புலர்ந்திடக் - கோயிலுட் புகுக்தே ஆதி காயகர் அயவந்தி

அமர்ந்தஅங் கணர்தம் பரத மூலங்கள் பணிந்துவிழ்க் தெழுந்து முன்பரவி மாத ராரையும் கொண்டுதம்

மனையில்.மீண் டணைந்தார்.'

போது - இரவு நேரம். போய் - கழிந்து. இருள் - இருட்டு. புலர்ந்திட - போய் விடியற்காலம் வந்து சேர. சந்தி. கோயிலுள். அந்தத் திருநீலநக்க நாயனார் சாத்தமங்கையில் விளங்கும் அயவந்தி ஈசுவரருடைய திருக்கோயிலுக்கு உள்ளே. புகுந்து-நுழைந்து. ஏ : அசை நிலை. ஆதி - எல்லாத் தேவர்களுக்கும் முதல், நாயகர் . தலைவராகிய, அயவந்தி - அயவந்தி என்னும் திருக்கோயிலில். அமர்ந்த - எழுந்தருளியுள்ள. அங்கணர் தம் - அழகிய கண்களைப் பெற்றவராகிய அயவந்தி சசுவரருடைய. கணர் : இடைக்குறை. கண் : ஒருமை பன்மை மயக்கம். தம் : அசைநிலை. பா.த - திருவடி களாகிய, ஒருமை பன்மை மயக்கம், மூலங்கள் - மூலப் பொருள்களை; எல்லா உயிர்களும் தோன்றுவதற்கு. மூலமான பரம்பொருளை. பணிந்து வீழ்ந்து - தரையில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. முன் - அந்த ஈசுவரருடைய சந்நிதியில். பரவி -அந்த சக வர ைரத் துதி த் து: யாத்ராரையும் - தம்முடைய தர்மபத்தினியாராகிய அழகு.