பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔42 பெரிய புராண விளக்கம் 9

மருவிய பெண்மணியாரையும். கொண்டு - தம்மோடு அழைத்துக் கொண்டு. தம் - தம்முடைய. மனையில் - திருமாளிகைக்கு உருபு மயக்கம். மீண்டு - மறுபடியும் திரும்பி வந்து. அணைந்தார் - சேர்ந்தார். .

அடுத்து வரும் 21 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய திரு மாளிகைக்கு எழுந்தருளிய பிறகு முன்பைக் காட்டிலும் பெருகி எழுந்த ஆனந்தம் தம்முடைய திருவுள்ளத்தில் வந்து அடைய இன்பத்தை அடையும் திறத்தில் ஒரு வரம்பு இல்லாத பூசையை அந்த அயவந்தி ஈசுவரருக்குப் புரிந்து பக்தி மேம்பட்டு விளங்கும் அடியவர்கள் மிகுதியாகத் தம்முடைய திருமாளிகையை அட்ைபவர்களுக்கு முன்பு செய்ததைப் போல அந்த அடியவர்கள் விரும்பும் செயல் களை விருப்பத்தோடு செய்து நிறைவேற்றுவார். பாடல் வருமாறு : - - .

  • பின்பு முன்னையின் பெருகிய மகிழ்ச்சிவக் தெய்த இன்பு றும்திறத் தெல்லையில்

பூசனை இயற்றி அன்பு மேம்படும் அடியவர்

மிகஅணை வார்க்கு முன்பு போலவர் வேண்டுவ - விருப்புடன் முடிப்பார்.' பின்பு - அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய திருமாளிகைக்கு மறு ப டி யு ம் எழுந்தருளிய பிறகு. முன்னையின் - முன்பைக் காட்டிலும். பெருகிய - பெருகி எழுத்த. மகிழ்ச்சி - ஆனந்தம். வந்து எய்த - தம்முடைய திருவுள்ளத்தில் வந்து அடைய. இன்புறும் - இன்பத்தை அடையும். திறத்து - விதத்தில். எல்லை - ஒரு வரம்பு. இல் இல்லாத கடைக்குறை. பூசனை - பூசையை. இயற்றி - அந்த அயவந்தி சசுவரருக்குப் புரிந்து. அன்பு - பக்தி, மேம்படும் - மேம்பாட்டை அடைந்து விளங்கும்.