பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் - 23

அடியவர் - அடியவர்கள்: ஒருமை பன்ம்ை மயக்கம். மிக. மிகுதியாக அணைவார்க்கு - தம்முடைய திருமாளிகையை அடைபவர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். முன்பு போல் . முன்பு செய்ததைப் போல. அவர் - அந்த அடிய வர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வேண்டுவ . விரும்பும் செயல்களை; என்றது தங்களுடைய பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை தங்களுடைய -புதல்வர்களுக்கு உபநயனம் செய்து வைக்க வேண்டும் என்பதையும், தங்களுடைய குமாரர்களுக்கு அழகும் அறிவும் உள்ள கன்னிகைகளைத் திருமணம்செய்து வைக்க - வேண்டும் என்பதையும், இவை போன்ற மற்றவை களையும். விருப்புடன் - விருப்பத்தோடு, முடிப்பார் . ...செய்து நிறைவேற்றுவார்.' . 2.

அடுத்து வரும் 22 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

அந்தத் திருநீலநக்க நாயனார் அத்தகைய பான்மை யோடு சாத்தமங்கையில் தங்கிக் கொண்டு இனிமையோடு வாழ்ந்து வரும் அந்தக் காலத்தில் புகழோடு நிலைபெற்று விளங்கும் பூந்தராயாகிய சீகாழியில் திருவவதாரம் செய் தருளிய வேதியரும் ஆளுடைய பிள்ளையாரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய பெருமையைப் பல தடவைகளும் கூறி இந்த உலகத்தில் வாழும் மக்கள் வாழ்த்துமாறு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி 'ந்ாயனாருடைய திருவடிகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு அவரோடு சேரும் விருப்பத்தில் 'தலை சிறந்து விளங்கினார். பாடல் வருமாறு : * .

. அன்ன தன்மையில் அமர்ந்தினி

தொழுகும்.அக் காளில் மன்னு பூந்தராய் வருமறைப்

பின்ளையார் பெருமை பன்னி வையகம் போற்றிட

மற்றவர் பாதம்